வீடியோ : ஜடேஜாவுக்கு பிடித்த தமிழ் பாடல் இதுவா? – என்னவென்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
ஐபிஎல் 2023 தற்போது முடிவு கட்டத்தை நெருங்கி வருகிறது இன்னமும் 2 போட்டிகள் மட்டுமே போட்டிகள் மட்டுமே மீதம் இருக்கிறது. சென்னை தற்போது பைனல் சென்ற நிலையில் குவாலிபையர் 2ல் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோத இருக்கிறது. இந்த போட்டியில் அந்த அணி வெற்றியடைகிறதோ அந்த அணி பைனலில் சென்னை
ஐபிஎல் 2023 தற்போது முடிவு கட்டத்தை நெருங்கி வருகிறது இன்னமும் 2 போட்டிகள் மட்டுமே போட்டிகள் மட்டுமே மீதம் இருக்கிறது. சென்னை தற்போது பைனல் சென்ற நிலையில் குவாலிபையர் 2ல் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோத இருக்கிறது. இந்த போட்டியில் அந்த அணி வெற்றியடைகிறதோ அந்த அணி பைனலில் சென்னை அணியை எதிர்கொள்ளும். இந்நிலையில் தான் சென்னை அணியின் DJ தற்போது சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறார்.
அதாவது மகேந்திர சிங் தோனி மைதானத்திற்குள் துளையும் போது ரசிகர்கள் அனைவரையும் அதிரவைத்தவர் டிஜே ஜென். இவர் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் போது விதவிதமான பாடல்களை போட்டு ரசிகர்களை மகிழ்விப்பார். சமீபத்தில் இந்தியா ஆஸ்திரேலியா போட்டியின் போது கூட விராட் கோலிக்கு போற்கண்ட சிங்கம் பாடலை போட்டிருந்தார் அது பயங்கரமாக வைரலாகி இருந்தது.
அதே போல வார்னருக்கும் நாட்டு நாட்டு பாடலை போட்டு அசத்தியிருந்தார். அது சோசியல் மீடியாவில் பெரும் வைரலாகியது. அதோ போல பல நேரங்களில் DRS, TIME OUT போன்ற நேரங்களில் பாடல்களை போட்டு மைதானத்தயே தெறிக்க விடுவார். அப்படியொரு நிலையில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடர்ல் சேப்பாக்கம் மைதானத்தில் டிஜே ஜென் கடந்த சில நாட்களாக செய்து வரும் சம்பவம் பெருமளவு வைரலாகி வருகிறது.
அதாவது தோனி கடந்த 4 வருடங்கள் கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கும் போது விக்ரம் படத்தில் வரும் once upon a time பாடலை போட்டு மைத்தனத்தையே அதிர வைத்தார். அந்த சம்பவம் பெரிய அளவு வைரலாகியது. அதற்கு பிறகு KGF படத்தில் வரும் toofan toofan பாடல் பெரும் அளவு வைரலாகியது. அதற்கு பிறகு பாஷா பாடல், திரை தீப்பிடிக்கும், படையப்பா BGM, சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு என தோனிக்கு பொருந்தும் வகையான பாடல்களை போட்டு வைரலாகி வருகிறார்.
Kabali song for MS Dhoni’s entry against Gujarat Titans in Qualifier 1.
— CricketGully (@thecricketgully) May 23, 2023
📹 @vdjzen pic.twitter.com/9s5LxjkVde
அப்படிப்பட்ட நிலையில் தான் ஐபிஎல் 2023 தொடரின் குவாலிபயர் போட்டியில் தோனி மைத்தனத்திற்குள் வரும் போது கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலை போட்டிருந்தார். பின்னர் இரண்டவது இன்னிங்கின் போது ஒரு சம்பவம் நடந்தது. அதனை தமிழ் நாடு வீரர் அஸ்வின் தன்னுடைய வீடியோ ஒன்றில் குறி நெகிழ்ச்சியடைத்துள்ளார். அதனை DJ ஜென்னும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
Namma Jadeja ku pudicha paata podalana eppadi ! and it turned into a wholesome moment ! 💛
— VDJ Zen (@vdjzen) May 23, 2023
எங்கள் வீட்டில் ⁰எல்லா நாளும் கார்த்திகை⁰எங்கள் நிலவில் ⁰என்றும் இல்லை தேய்பிறை !
#EngalVeetil #VaanathaiPola #Tataipl2023 #chennaisuperkings #ravindrajadeja #csk #jaddu #yellove… pic.twitter.com/j34ILxQYiq
அந்த வீடியோவில் தான் அஸ்வின் கூறுகையில் “நான் ஜிம்முக்கு போகும் போது பொதுவாகவே தமிழ் பாடல்கள் தான் போடுவேன். அப்போது அங்கிருந்த ஜடேஜா ஒரு தமிழ் பாடலை மிகவும் பிடித்து விட்டதாக கூற, என்னவென்றுகேட்டால் “எங்கள் வீட்டில் எல்லாநாளும் கார்த்திகை என்று பாடல் என்று அஸ்வின் கூறியிருந்தார். அப்படிப்பட்ட நிலையில் தான் DJ ஜென் அந்த பாடலை குவாலிபைர் போட்டியின் போது ஒலிக்க விட்டார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.