இவர்களிடமே தோற்று விடீர்களே…இந்தியா சாதரண அணியாக இருக்கிறது – ஓபனாக விமர்சித்த இந்திய அணியின் முன்னாள் வீரர்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல

By ·

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து தலை குனிந்தது. வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால் 5 (4) ரன்களிலும் சுப்மன் கில் 9 (9) ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய 17/2 என்ற தடுமாறி பின்னர் 20 ஓவர்களில் இந்தியா 165/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிரடியாக விளையாட எளிதான வெற்றி பெற்றது. இதனால் வித்தியாசமான பரிசோதனைகளை செய்யும் ராகுல் டிராவிட் மீது நெட்டிசன்கள் பாலரும் குற்றசாட்டுகளை வைத்தனர்.

அது போக அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கடந்த 2006க்குப்பின் 17 வருடங்கள் கழித்து முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தோற்றுள்ளது. குறிப்பாக 2023 உலக கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணி 2022 டி20 உலக கோப்பையிலும் நேரடியாக தகுதி பெறாமல் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.

மறுபுறம் ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் இன்டனியாவின் நட்சத்திர வீரர்கள் இருந்தும் இந்தியாவை தலைநிமிர வைக்க முடியவில்லை என்பது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நீண்ட காலமாகவே நமது நாடு மோசமாக செயல்பட்டு வருவதாக மீண்டும் விமர்சித்துள்ளார்.

அவர் கூறியதாவது “வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியா மிகமிக சாதாரண அணியாகவே இருக்கிறது. அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டி20 உலக கோப்பைக்கு தகுதி பெறாமல் திண்டாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் நாம் வங்கதேசத்தில் நடந்த ஒருநாள் தொடரிலும் தோற்றோம். எனவே முட்டாள்தனமான அறிக்கைகளை மட்டும் வெளியிடுவதற்கு பதிலாக அவர்கள் சுய பரிசோதனை செய்வார்கள் என்று நம்புகிறேன்

50 ஓவர் மட்டுமில்லாமல் வெஸ்ட் இண்டீஸ் கடந்த 2022 டி20 உலக கோப்பைக்கும் தகுதி பெறவில்லை. அவர்களுக்கு எதிராக இந்தியா மோசமாக செயல்படுவதை பார்ப்பது வேதனையாக இருக்கிறது. அது கம்பளத்தின் கீழ் இருக்கும் சுமாரான செயல்முறையை துலக்குகிறது. தற்போதைய அணியில் வெற்றிக்கான பசியும் வெற்றி பெற வேண்டும் என்கிற நெருப்பும் இல்லை. நாம் ஒரு மாயையில் வாழ்கிறோம் என்று விமர்சித்துள்ளார் வெங்கடேஷ் பிரசாத்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை