இது கூடவா உங்களுக்கு தெரியாது – ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் க

By ·

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2வது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.

ஆனால் இரண்டவது போட்டியில் போது இந்தியா வெற்றி பெறுவதற்கான ஒரு வாய்ப்பு வந்தது. அதாவது இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் ஆச்சரியமடைந்துள்ளார். போட்டியின் 16வது ஓவரில், லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி. அதுவும் ஒரு இக்கட்டான நிலைமையில் வீழ்த்தினார். மேலும் மூன்றாவது விக்கெட்டும் lBW அவுட் கொடுத்த நிலையில் அது நாட் அவட் ஆனது.

இதன் மூலம் போட்டியின் வேகத்தை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றினார். அதன் பிறகு வெற்றி பெற இரண்டு விக்கெட்டுகள் தேவைப்பட்டன. ஆனால் பாண்டியா சாஹலை மீண்டும் தாக்குதலுக்கு கொண்டு வரவில்லை. இந்நிலையில் இந்தியா தனது இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்தத. சொல்லப்போனால் சாஹல் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் பூரன் ஆட்டமிழந்த பிறகு போராடிக் கொண்டு வந்த இந்தியாவின் வெற்றியை சஹாலை சரியாக பயன்படுத்தவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர்களையே பாண்டியனை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதன் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் ஹர்திக் பாண்டியனை ஓபனாக விமர்சித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றி இட்டுள்ளார். அந்த பதிவில் கடந்த 2008ஆம் ஆண்டில் ஐபிஎல் வந்த பிறகு இந்திய அணியால் டி20 உலக கோப்பையில் வெற்றியடைய முடியாதது குறித்தும், ஹர்திக் பாண்டியா குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வெங்கடேஷ் பிரசாத் பேட்டி :

அவர் கூறியதாவது “அணியின் செயல்பாடு மிகமிக சுமாராக இருந்தது. இதனை ஒதுக்கி தள்ளுவதில் அர்த்தமில்லை. கடந்த 2007 டி20 உலகக் கோப்பைக்கு பின் ஐபிஎல் போட்டிகளானது தொடங்கியது. அதற்கு பிறகு இந்தியா களமிறங்கிய 7 டி20 போட்டிகளிலும் இந்தியா உலகக் கோப்பையை வெல்லவில்லை. ஒரு முறை மட்டுமே தான் பைனல் வரையில் சென்றோம். நாட்டுக்காக வெற்றி பெற வேண்டும் என்ற அதிகப்படியான பசி உங்களுக்கு இருக்க வேண்டுமல்லவா.?

தற்போது நடந்து முடிந்த போட்டியில் சஹால் 16வது ஓவரில் 2 விக்கெட்களை எடுத்து தம்முடைய 3வது ஓவரில் போட்டியை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார். வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுகளுடன் சரிந்த அந்த சமயத்தில் அவர் ஏன் மீண்டும் பந்து வீசவில்லை. அதனால் பின்னர் 9 மற்றும் 10வது களமிறங்கிய பேட்ஸ்மேன்களே இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களை எளிதாக கையாண்டு வெற்றியும் பெற்று கொடுத்து விட்டனர். இது போன்ற சுழ்நிலுயில் புத்தகாதில் இருப்பதை மட்டும் செய்யாமல் புத்திசாலி தனமாக செய்திருக்க வேண்டும் என்றார் வெங்கடேஷ் பிரசாத்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை