தோனி சொன்னதை தவறாக பயன்படுத்துகின்றனர்.. வெங்கடேஷ் பிரசாத் குற்றசாட்டு.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா டி20 தொடரில் அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக

By ·

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா டி20 தொடரில் அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கடந்த 2006க்குப்பின் 17 வருடங்கள் கழித்து முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தோற்றுள்ளது.

குறிப்பாக 2023 உலக கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணி 2022 டி20 உலக கோப்பையிலும் நேரடியாக தகுதி பெறாமல் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.மறுபுறம் ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் இன்டனியாவின் நட்சத்திர வீரர்கள் இருந்தும் இந்தியாவை தலைநிமிர வைக்க முடியவில்லை என்பது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நீண்ட காலமாகவே நமது நாடு மோசமாக செயல்பட்டு வருவதாக மீண்டும் விமர்சித்துள்ளார. அதாவது ஒரு போட்டி அல்லது தொடரின் முடிவை பற்றி கவலைப்படாமல் அதனுடைய செயலில் முழுமையான கவனம் செலுத்தினால் வெற்றி தாமாக வரும் என்பது தோனியின் தாரக மந்திரம் என்பதை தவறாக பயன்படுத்தியவாதக் கூறியுள்ளார் அவர்.

அவர் கூறியதாவது “செயல்முறை எனும் வார்த்தை இப்போது தவறாக பயன்படுத்தப்படுகின்றன. எம்எஸ் (தோனி) அதற்கான பொருளைக் கூறியுள்ளார். இப்போது அதற்குரிய வார்த்தைகளை பயன்படுத்துங்கள் தோழர்களே. ஏனெனில் தற்போதைய அணியின் தேர்வில் நிலைத்தன்மை இல்லை சீரற்ற விஷயங்கள் அதிகமாக நடக்கிறது. இந்தியா தங்களுடைய திறமையையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும். தற்போதைய அணியில் வெற்றிக்கான பசி மற்றும் ஆர்வத்தில் குறை காணப்படுகிறது

கேப்டன் என்ன செய்வதென்றே தெரியாமல் பார்க்கிறார். பவுலர்கள் பேட்டிங் செய்ய மறுக்கின்றனர். பேட்ஸ்மேன்கள் பவுலிங் செய்ய மறுக்கின்றனர். இந்த சமயத்தில் ஆம் என்று சொல்லும் கண்மூடித்தனமான நபரை தேடாமல் இருப்பது முக்கியம். ஏனென்றால் அதில் யாரோ ஒருவர் உங்களுக்கு பிடித்த வீரராக இருப்பார். ஆனால் அதை விட்டு பெரிய நல்லதை பாருங்கள். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியா தற்போது சாதாரண அணியாகவே செயல்படுகிறது.

அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் வீழ்ந்துள்ளார்கள். மேலும் நாம் வங்கதேசத்தில் நடந்த ஒருநாள் தொடரில் தோற்றோம். எனவே முட்டாள்தனமான அறிக்கையை வெளியிடுவதற்கு பதிலாக அவர்கள் சுயபரிசோதனை செய்வார்கள் என்று நம்புகிறேன். இந்த தடுமாற்றத்திற்கு இந்திய அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் தான் பொறுப்பாவார்கள். மற்றும் அவர்கள் தான் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை