வீடியோ: ரீவியூ எடுக்க வேண்டாம் என்று சொல்லி விக்கெட்டை நழுவவிட்ட பரத். அடுத்த ஓவரே தரமான சம்பவம் செய்த பும்ரா.

IND vs ENG முதல் போட்டியானது ஹைதராபாத் மைதானத்தில் நேற்று முதல் நாளில் காலை 9 மணிக்கு தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் சார்பில் அஸ்வின் ஜடேஜா மற்றும் சிறப்பாக பந்துவீச்சு இங்கிலாந்து அணியை சுருட்டி

By ·

IND vs ENG முதல் போட்டியானது ஹைதராபாத் மைதானத்தில் நேற்று முதல் நாளில் காலை 9 மணிக்கு தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் சார்பில் அஸ்வின் ஜடேஜா மற்றும் சிறப்பாக பந்துவீச்சு இங்கிலாந்து அணியை சுருட்டி இருந்தனர். இங்கிலாந்து அணி 246 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் அஷ்வின் மற்றும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் எடுத்து இருந்தனர். தற்போது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி இருந்தனர். நாள் முடிவில் இந்திய அணி 119 ரன்களுக்கு 1 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தது. அதில் ஜெயஸ்வால் 76 ரன்களும் 24 ரன்களும் 14 ரன்களும் அடித்து இருந்தனர். ரோஹித் ஷர்மா மட்டுமே தனது விக்கெட்டை இழந்து இருந்தார்.

இன்றைய நாள் தொடக்கத்தில் ஆரம்பத்திலே ஜெய்ஸ்வால் 80 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் சற்று நேரத்தில் கில்லும் 23 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.அதன் பின் கேஎல் ராகுல் 86 ரன்களும் ஷ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களும் ஸ்ரீகர் பாரத் 41 ரன்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் 1ரன்களும் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அதன் பின் ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அக்சர் பட்டேலும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிதற அடித்தனர்.

இறுதியாக இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 421 ரன்களை அடித்து இருந்தனர். எனவே இந்திய அணி 175 ரன்கள் முன்னிலையில் நேற்றைய நாளை முடிவு செய்தது. இன்றைய நாளில் களமிறங்கிய இந்திய அணி 436 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் முன்னிலையில் இருந்து வருகிறது. அதன் பின் இன்றைய நாளிலே இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய வந்தது. இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் மிகவும் வலிமையான நிலையில் இருந்து வந்தது. இருப்பினும் அதில் முதல் விக்கெட்டை அஷ்வின் எடுத்து தனது 494 விக்கெட்டுகளை அவர் எடுத்து இருந்தார்.

அதன் பின் பும்ரா பென் டேக்கட்டை விக்கெட் எடுபதற்க்கு பந்து வீசி இருந்தார். அப்போது பந்து அவரின் லேக் பேடில் பட்டது. இந்த நிலையில் பும்ரா நடுவரிடம் முறையிட அவுட் கொடுக்கப்படவில்லை. அதற்க்கு ரோஹித் சர்மா ரிவ்யூ கேட்பது குறித்து விக்கெட் கீப்பர் கேஎஸ்.பரத்திடம் கேட்டு இருந்தார். அதற்க்கு அவர் எடுக்க வேண்டாம் என்றும் கூறி இருந்தார். எனவே ரோஹித் ஷர்மா ரீவீயு கேட்கவில்லை.

ஆனால் சிறிது நேரம் கழித்து பெரிய திரையில் பும்ரா வீசிய பந்து ஸ்டெம்பை துல்லியமாக தாக்க அது அவுட் என தெரிந்தது. அதை பார்த்த பும்ரா களத்திலேயே தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் அடுத்த ஓவரை வீசிய பும்ரா பென் டக்கெட்டை விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். அதன் பின் சிறப்பாக பந்து வீசி ஜோ ரூட் விக்கெட்டையும் அவர் வீழ்த்தி இருந்தார். இங்கிலாந்து அணி தற்போது 4 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களில் விளையாடி வருகின்றது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை