வீடியோ : மீண்டும் சொகுசு காரில் பயணம் செய்யும் தோனி – இது எந்த வகையான கார் தெரியுமா?

எம்.எஸ்.தோனிக்கு புதிய மற்றும் விண்டேஜ் பைக்குகளின் மீதியுள்ள ஆர்வம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தனக்கு பழைய கார்களின் மீதும் பிரியம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் தலைசிறந்த கேப்டங்களில் ஒருவர் எம்.எஸ்.தோனி. அவர

By ·

எம்.எஸ்.தோனிக்கு புதிய மற்றும் விண்டேஜ் பைக்குகளின் மீதியுள்ள ஆர்வம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தனக்கு பழைய கார்களின் மீதும் பிரியம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் தலைசிறந்த கேப்டங்களில் ஒருவர் எம்.எஸ்.தோனி. அவர் கேப்டனாக ஆனவுடன் கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்று தந்தார் தோனி.

பின்னர் இந்த வெற்றி தொடர ஆரம்பித்து பல போட்டிகளில் வெற்றி பெற்ற தோனி 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் பல ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்று கொடுத்தார். இதற்கு பிறகு 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியிலும் கோப்பையை வென்று கொடுத்த தோனி ஐபிஎல் போட்டியிலும் சென்னை அணிக்காக 5 கோப்பைகளை வென்றது கொடுத்தார்.

மேலும் 42 வயதாகும் தோனி இந்த ஐபிஎல் சீசனோடு விடைபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் என்னுடைய ரசிகர்களுக்காக நான் அடித்த ஆண்டும் விளையாட முயற்சி செய்வேன் என்று கூறினார். இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது குறிப்பிடதக்கது. ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது பட்டத்தை வென்று சாதனை படைத்ததை அடுத்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி களத்திற்கு வெளியே தனது நேரத்தை செலவழித்து வருகிறார்.

இரண்டு மாத கால சீசனுக்குப் பிறகு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அன்றிலிருந்து தனது குடும்பத்துடன் சில தரமான நேரத்தைச் செலவழிக்கிறார். சமீபத்தில் கூட தன்னுடைய கைக்குகளில் கலெக்சன்களை தன்னுடைய நண்பர்களுக்கு காட்டிய வீடியோ பெருமளவு வைரலானது. அப்படிபட்ட நிலையில் சமீபத்தில் தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் விண்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் 1980 காரை ஓட்டிக் கொண்டிருந்த ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

மேலும் ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் இருக்கும் கேரேஜில் இருக்கும் பைக் மற்றும் கார்கள் இருக்கும் வீடியோ ஓன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதே போன்று ஓய்வெடுக்கும் நேரங்களில் அங்கிருக்கும் கார் மற்றும் பைக்குகளை அவரே சீரமைத்து அதில் பயணமும் செய்து வருகிறார். இந்நிலையில் தான் மீண்டும் ஒரு வின்டேஜ் வகை காரை தோனி தன்னுடைய ஊரில் ஓட்டிச்செல்லும் வீடியோ ஓன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது.  

அந்த வகையில் 40 ஆண்டுகள் மேலாக பழமையான ஆம்.எஸ்டி 455 வகை காக்கும். இது ஒரு இடதுகை ஸ்டேரிங் உள்ள சொகுசு கார் என்பதும் இதில் இரு நபர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் சாலை விதிமுறைகளை பின்பற்றி சீட் பெல்ட் அணிந்தே தோனி பயணித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை