வீடியோ : ஹர்திக் பாண்டியாவுக்கு வீடியோ மூலம் பதிலடி கொடுத்தாரா நிகோலஸ் பூரன்? என்ன நடந்தது?
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 3 -2 என்ற கணக்கில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்தியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் மற்று
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 3 -2 என்ற கணக்கில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்தியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பெற்ற தோல்விக்கு பிறகு டி20 தொடரில் கம்பேக் கொடுத்தது தாங்கள் இன்னமும் டி20 போட்டியில் வீழவில்லை என்பதை நிரூபித்தது.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு முக்கியமான ஒரு காரணமாக இருந்தவர் நிகோலஸ் பூரன். இவர் ஐபிஎல் போட்டியிலேயே அசத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் இந்த போட்டியில் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிரடி துவக்கிய கெய்ல் மேயர்ஸ் 10 (6) ரன்களில் அவுட்டாகி சென்றாலும் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் வழக்கம் போல சரமாரியாக அடித்து நொறுக்கினார்.
ப்ரெண்டன் கிங் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 85* (55) ரன்களும் ஷாய் ஹோப் 22* (13) ரன்களும் எடுத்ததால் 18 ஓவரிலேயே 171 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. இதனை தெடர்ந்து பலரும் நிகோலஸ் பூரணை பாராட்டி வரும் நிலையில் தான் அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதாவது IND vs WI T20 தொடரில் 3வது போட்டியின் போது ஹர்திக் பாண்டியா நிகோலஸ் பூரன் குறித்து பேசியிருந்தார். அப்போது அவர் பந்துகளை அடிக்க வேண்டும் என்றால் என்னுடைய பௌலிங்கில் அடிக்கட்டும். நான் இப்படியான ஒரு போட்டியை தான் விரும்புகிறேன். அவர் கண்டிப்பாக நங்கவது போட்டியிலும் என்னுடைய பந்துகளை அடிக்க முயற்சி செய்வார் என்று அப்போது கூறினார் ஹர்திக் பாண்டியா.
ஆனால் நான்காவது போட்டியில் நிகோலஸ் பூரன் 35 பந்துகளில் 47 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு 5வது போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக தொடர்ந்த 2 சிக்ஸர்களை விளாசினார். மேலும் ஆட்டம் முழுவதும் இவர்களுக்கு இடையே ஹர்திக் பாண்டியா சென்று பேசிக்கொண்டே இருந்தார். இந்நிலையில் தான் நிகோலஸ் பூரன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றி வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் “தன்னுடைய வாயை ஜிப் கொண்டு மூடும் படியாக சைகை காட்டினார் நிகோலஸ் பூரன், மேலும் அவருக்கு அருகே இருந்த அகேல் ஹுசைன் காற்றில் முத்தம் கொடுக்கும் சைகையும் செய்து பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோ பதிவின் கீழ் உங்களுக்கு உங்களுக்கு தெரிந்தால் அது தெரியும் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் இது இந்த பதிவை ஹர்திக் பாண்டியாவிற்க்கு பத்திலடியாகத்தான் பூரன் பதிவிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றர்.