வீடியோ : எல்லை மீறிய ஆஷஸ் 5வது போட்டி – ரிக்கி பாண்டிங் மீது ரசிகர்கள் தாக்கு.
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரையில் 34 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 32 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றிருக்கிறது. மேலும் 6 முறை போட்டியானது சமன் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த வருடத்திற்காக ஆஷஸ் 5 போட்டிகள் கொண்ட
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரையில் 34 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 32 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றிருக்கிறது. மேலும் 6 முறை போட்டியானது சமன் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த வருடத்திற்காக ஆஷஸ் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலியா முதல் போட்டியில் அபாரமான வெற்றியை பதிவு செய்த நிலையில் அடுத்ததாக 2 வது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.
இதனால் இங்கிலாந்து அணியின் பாஸ்பால் முறை மீது பலவிதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அந்த நிலையில் தான் மூன்றாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து ஒரு வழியாக வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து இந்த தடாரின் 4வது போட்டியில் இங்கிலாந்து மிகவும் அற்புதமாக விளையாடிய நிலையில் மழை காரணமாக போட்டியானது பாதிக்கப்பட்டு டிரா ஆன நிலையில் நேற்று ஆஷஸ் தொடரின் 5வது போட்டியானது தொடங்கியது.
இந்நிலையில் 5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளின் முடிவில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பேட்டர் ரிக்கி பாண்டிங் கோபமடைந்தார். அதாவது ஆஷஸ் கிரிக்கெட்டின் கடினமான நாளின் முடிவில் ஓவல் மைதானத்தில் மற்ற வீரர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கை திராட்சை பலத்தை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
Hi @piersmorgan & @TheBarmyArmy
— FIFA Womens World Cup Stan account ⚽️ (@MetalcoreMagpie) July 28, 2023
Is this within the spirit of the game?
Pelting grapes at Ponting who’s just a commentator.
I know you’ve lost the Ashes and all talk about Sour grapes pic.twitter.com/xkewu1h8v3
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 5வது டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் பாண்டிங்மற்றும் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான இயன் வார்டு, ஆஸ்திரேலியா ஆஃப் ஸ்பின்னர் டாட் மர்பியை நேர்காணல் செய்திருந்தனர். அப்போது ரசிகர்கள் இருந்த பகுதியில் இருந்து சிராட்சைகள் வந்து விழுந்தன. ஓவல் மைதானத்தில் ரசிகர்கள் செய்த இந்த நடத்தையால் ரிக்கி பாண்டிங் கொஞ்சம் கோவப்பட்டார்.
மேலும் அவர் கோவப்பட்டு “நான் இப்போது திராட்சைப் பழத்தால் தாக்கப்பட்டேன். உண்மையில் அது யார் என்பதைக் கண்டுபிடிப்பதில் எனக்கு கவலையில்லை” என்று கூறினார். அந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது நடந்து வரும் 5வது நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பந்துவீச்சை தேர்வு செய்து சிறப்பாக பந்துவீச்சு விக்கெட்டுகளை சாய்தது. இதனால் இங்கிலாந்து அணி 283 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய அஸ்திரலியா சிறப்பான பேட்டிங் செய்த நிலையில் இந்த செய்தியை எழுதும் வரையில் 2 விக்கெட்டுகளை மட்மே இழந்து 115 ரன்களை எடுத்துள்ளது.