வீடியோ : ஸ்மித்திடம் சேட்டையை காட்டிய சிராஜ் – விமர்சிக்கப்பட்டாலும் அடுத்து நடந்த திருப்புமுனை
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஒரு முக்கிய தருணத்தில், ஆஸ்திரேலிய அணியின் முதன்மை வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஓவல் மைதானத்தில் 2வது நாளில் தனது 31வது டெஸ்ட் சதத்தை அடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். ஆட்டமிழக்காமல் 95* ரன்களுடன் இடண்டாவது நாள் தொடங்
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஒரு முக்கிய தருணத்தில், ஆஸ்திரேலிய அணியின் முதன்மை வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஓவல் மைதானத்தில் 2வது நாளில் தனது 31வது டெஸ்ட் சதத்தை அடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். ஆட்டமிழக்காமல் 95* ரன்களுடன் இடண்டாவது நாள் தொடங்கி, ஸ்மித் நேரத்தை வீணடிக்கவில்லை தொடர்ந்து ரன்களை எடுக்க தொடங்கினார்.
மறுபுறம் அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் டி20 தொடரை போல விளையாடி 150 ரன்களை பூர்த்தி செய்தார். இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய அணி இப்படி தொடர்ந்து ரன்களை அடுத்துக் கொண்டிருந்த நிலையில் 86வது ஓவரை சிராஜ் வீச வந்தார். இந்நிலையில் அந்த ஓவரின் போது ற்கனவே 2 பந்துகள் பவுண்டரிகள் சென்ற நிலையில் பந்தை எதிர்கொள்ள தயாராக இருந்த ஸ்மித் ஸ்பைடர் கேம் நகர்ந்த்தால் கீரிஸை விட்டு விளகினார்.
இந்நிலையில் ஏற்கனவே ரன்கள் சென்றுகொண்டிருந்த நிலையில் சிராஜ் பந்தை வீசி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆனாலும் ஸ்மித் கேமெரா நகர்ந்த காரணத்தினாலேயே விளகினார். இதனால் விக்கெட் எடுக்க முடியாத ஒரு நிலையில் உங்களுடைய கோபத்தை இதில் காட்டாதீர்கள் என்று நெட்டிசன்கள் சிராஜை விமர்சித்தனர். இருப்பினும் இது போன்று ஒரு சம்பவம் நடக்கும் போது போட்டியிடும் இரண்டு அணிகளுக்கும் இடையே எதோ ஒரு அணியில் பதர்ட்டம் ஏற்படும்.
அப்படிப்பட்ட நிலையில் தான் சில ஓவர்கள் கடந்த நிலையில் ஒருத்தியாக ஆடிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 174 பந்துகளை 163 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜிடம் ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு கேமரூன் கிரீனும் 7 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இப்படி விக்கெட்டுங்கள் விழுந்தா நிலையில் சதம் அடித்து சரியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித்தும் தாகூரின் பந்தில் 121 எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் சிராஜின் அந்த செயலுக்கு பிறகு தெரிந்தோ தெரியாமலோ விக்கெட்டுகள் விழுக ஆரம்பித்தது. ஆனாலும் இவர்களுக்கு பிறகு சிறப்பாக அடைய அலெக்ஸ் கேரி 69 பந்துகளில் 48 ரன்களை விலாச ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்களை குவித்தது. இப்படியொரு நிலையில் முதல் இன்னிங்கை ஆட களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது.
ஐபிஎல் போட்டிங்களில் சொதப்பினாலும் இங்கே கலக்குவார் என்று நினைத்த ரோஹித் ஷர்மா 26 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் பேட் கம்மிங்கிடம் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இந்திய பெரிய நம்பிகை வைத்து களமிறங்கிய சுப்மன் கில் தேவையில்லாமல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரர் புஜாரா 14 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் விராட் மற்றும் ரஹானே விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.