வீடியோ : நான் வந்துட்டேன்னு சொல்லு.. IND vs IRE முதல் ஓவரிலேயே அதிரடியாக அசத்திய பும்ரா.

இந்திய அணியானது அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட நிலையில் காயத்திலிருது திரும்பி வந்துள்ள பும்ராவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. பும்ரா கடந்த வருடம் முதுகில் ஒரு காயம் ஏற்பட்டதை தொ

By ·

இந்திய அணியானது அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட நிலையில் காயத்திலிருது திரும்பி வந்துள்ள பும்ராவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. பும்ரா கடந்த வருடம் முதுகில் ஒரு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.

அதனை தொடர்ந்து பும்ரா பயிற்சி எடுத்து வந்த நிலையில் தான் மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்ப கடுமையாக உழைத்த நிலையில் தான் வரும் உலக கோப்பைக்கு முன்னதாக அயர்லாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தேர்வாளர்கள் பும்ராவை சோதனை செய்ய இருக்கின்றனர். அங்கு மூன்று டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் பும்ராவின் செயல்பாடு பொறுத்தே உலக கோப்பையில் அவர் இடம்பெறுவாரா மாட்டாரா என்பது தெரியும்.

மேலும் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது 3 டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கும் நிலையில். இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட ஓராண்டாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வரும் அவர் எவ்வாறு இந்த தொடரில் பந்து வீசப்போகிறார் என்பதை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியா vs அயர்லாந்து டி20 தொடரானது இன்று தொடங்கியது. இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய அயலர்ந்து அணிக்கு முதல் ஓவர் பெரிய ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்து. அதாவது காயம் முடிந்து இந்திய அணிக்கு திரும்பிய பும்ரா பல காலம் கழித்து தன்னுடைய முதல் ஓவரி வீச வந்தார். அப்போது தான் ஒரு சம்பவம் நடந்தது.

அதாவது பும்ரா முதல் ஓவரின் முதல் பந்தில் அயர்லந்து அணியின் தொடக்க வீரரான பால்பிர்னி போர் அடிக்க இரண்டாவது பந்தில் பும்ரா அவரை போல்ட் அவுட் ஆக்கினார். அதனை தொடர்ந்து அந்த ஓவரின் 5வது பந்தில் டக்கர் விக்கெட்டை எடுத்தார் பும்ரா. இதன் மூலம் தன்னுடைய வருகையை மிகவும் அழுத்தமாக கூறியுள்ளார் பும்ரா. மேலும் இந்த விக்கெட்டுகளின் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடியும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்தியா vs அயர்லாந்து போட்டியில் தற்போது விளையாடி வரும் இந்தியா இந்த செய்தியை எழுதும் வரையில் 6 விக்கெட்டுகளை 10.3ஓவர்களில் வீழ்த்தியுள்ளது. மேலும் அயர்லாந்து அணியானது 59 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிய நிலையில் இருக்கிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை