வீடியோ : பயங்கரமாக காயம் ஏற்படுவதில் இருந்து நூலிழையில் தப்பிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் – நடந்தது என்ன?
கிரிக்கெட் போட்டிகள் பொதுவாக தொடக்கத்தில் சுவாரசியமாக தொடங்கினாலும் பின்னர் போட்டியின் நடுவே பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படும், சில நேரம் 50 ஓவர்கள் போட்டியில் முதலில் அதிக ரன்கள் ஒரு அணி எடுத்தால் அதனை ஈடுகட்ட முடியாமல் எதிரணி திணறும் பட்சத்தில் போட்டியானது சுவாரசியம் இல்லாமல்
கிரிக்கெட் போட்டிகள் பொதுவாக தொடக்கத்தில் சுவாரசியமாக தொடங்கினாலும் பின்னர் போட்டியின் நடுவே பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படும், சில நேரம் 50 ஓவர்கள் போட்டியில் முதலில் அதிக ரன்கள் ஒரு அணி எடுத்தால் அதனை ஈடுகட்ட முடியாமல் எதிரணி திணறும் பட்சத்தில் போட்டியானது சுவாரசியம் இல்லாமல் போய் விடுகிறது. அப்படிப்பட்ட நிலையில் வந்ததுதான் டி 20 கிரிக்கெட் பார்மட்.
இந்த வகையான போட்டியில் ஒரு அணி 20 ஓவர்களில் 200 ரன்களை அடித்தாலும் எதிரணிக்கும் 20 ஓவர்கள் மட்டுமே இருப்பதினால் அதற்கு ஈடுகொடுத்து விளையாடும். மேலும் குறைவான நேரமே தேவைப்படுவதினால் சுவாரசியமானது கூடுகின்றது. இதனாலேயே டி20 போட்டிகளை ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படுகிறது. சொல்லப்போனால் கிரிக்கெட் தற்போது அமெரிக்கா வரையில் சென்றடைய ஒரு முக்கியயமான காரணம் டி20 கிரிக்கெட் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் போலவே பல நாடுகளிலும் டி20 லீக்குகள் நடைபெறுகிறது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வருடம் தோறும் நடைபெற்று வரும் பிரபலமான கரீபியின் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. அதில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெற்ற 9வது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் திரிபாங்கோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா 20 ஓவர்களில் 167/5 ரன்கள் எடுத்தது. நைட் ரைடர்ஸ் சார்பில் அதிகபட்சமாக ரசல் மற்றும் ட்வயன் ப்ராவோ தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து 168 ரன்களை துரத்திய நைட் ரைடர்ஸ் அணிக் 14.5 ஓவரில் அந்த அணி வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய செயின்ட் லூசியா சார்பில் அதிகபட்சமாக காரி பேரி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
What just happened!?!
— CPL T20 (@CPL) August 26, 2023
Johnson Charles almost dismissed by his own helmet! @BetBarteronline magic moment!#CPL23 #SLKvTKR #BetBarter pic.twitter.com/Ts6YxZY1m0
அப்படிப்பட்ட நிலையில் தான் செயின்ட் லூசியா அணிக்கு நட்சத்திர தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் அதிரடியாக விளையாட முயற்சித்துக் கொண்டிருந்த போது ட்வயன் ப்ராவோ வீசிய 12வது ஓவரின் 4வது பந்தில் வித்தியாசமான ஸ்கூப் ஷாட் அடிக்க முயற்சித்தார். குறிப்பாக ப்ராவோ வீசிய லோ ஃபுல் டாஸ் பந்தை அப்படியே லாவகமாக பேட்டை அடியில் விட்டு விக்கெட் கீப்பர் தலைக்கு பின்னே சிக்ஸராக அடிக்க முயற்சித்த அவருடைய எண்ணம் இறுதியில் அவருக்கே பெரிய அடியை கொடுத்தது.
ஏனெனில் பெரிய அளவில் பவுன்ஸாகி வராத காரணத்தால் அவருடைய பேட்டில் பட்ட பந்து நேராக அவருடைய தாடை பகுதியில் சென்று வலுவாக அடித்தது. ஆனாலும் அதிர்ஷ்டவசமாக ஹெல்மெட் கம்பிகளில் பட்டதால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் பந்து பட்ட வேகத்தில் ஹெல்மெட் தாமாக கழன்று கொண்டு ஸ்டம்ப்பில் மீது மோதுவதற்காக நேரத்தில் அதனை தம்முடைய ஒற்றை காலால் தட்டி விட்டு அவுட்டாவதை தவிர்த்தார். இது பலருக்கும் ஆனால் இந்த சம்பவம் அந்த போட்டியின் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.