வீடியோ : அன்று நடந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுத்த பொல்லார்ட் – காலில் விழுந்தே விட்ட பிராவோ.

கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும்

By ·

கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும் லீக் போட்டிகளை நடத்தி கிரிக்கெட்டை வளர்த்து வருகிறார். அந்த வகையில் தான் அமெரிக்காவில் மேஜர் கிரிக்கெட் லீக் போட்டியானது நடந்து வருகிறது.

இந்த போட்டியானது சில நாட்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. 6 அணிகள் விளையாடும் இந்த தொடரில் மொத்தமாக 15 போட்டிகள் மட்டுமே நடக்க இருக்கிறது. இந்நிலையில் TSK, WAF, MINY, SOR அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் SOR அணி TSk அணியை வீழ்த்தி பைனலுக்கு சென்று விட்டது, இந்நிலையில் MINY vs WAF போட்டியில் வெற்றி பெற்ற அதில் மும்பை வெற்றிபெற்ற நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் நியூயார் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி குவாலிபவர் 2ல் மோதியது.

இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியானது பந்துவீச்சை தேர்வு செய்த்த நிலையில் டெக்சாஸ் அணிக்கு 158 ரன்கள் மட்டுமே கொடுத்தது. இந்நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூயார் அணியானது இந்த ஸ்கோரை 19 ஓவர்களிலேயே தொட்டு வெற்றி பெற்றது.

சுவாரசியமான சம்பவம் :

மேலும் இந்த வெற்றியின் மூலம் வரும் ஜூலை 31இல் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் சீயாட்டல் அணியை எதிர்கொள்ள எம்ஐ நியூயார்க் தகுதி பெற்றது. ஆனால் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டுவிட்டது. இந்நிலையில் கடந்த 2012 சீசனில் எலிமினேட்டரில் பொல்லார்ட் விக்கெட்டை எடுத்த பிராவோ விமானத்தில் ஏறி வீட்டுக்குச் செல்லுங்கள் என்று சைகை செய்து கலாய்த்திருப்பார். அந்த சம்பவத்தை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது.

அப்படிப்பட்ட நிலையில் தான் அதனை மறக்காத பிராவோ அதற்கு பதிலடி கொடுத்தார். அதாவது போட்டிக்கு பிறகு பொல்லார்ட் மற்றும் டிஜே பிராவோ சந்தித்து கொண்டனர். அந்த சந்திப்பின் போது பழையதை மறக்கதாக பொல்லார்ட் விமானத்தில் ஏறி வீட்டுக்குச் செல்லுங்கள் என்பதை போல சிரித்துக் கொண்டே கலாய்த்து பதிலடி கொடுத்தார். அதற்கு காலில் விழுகிறேன் கலாய்ப்பதை நிறுத்து என்ற வகையில் பிராவோ ரியாக்சன் கொடுத்தது நட்பை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இந்த வீடியோ பதிவானது தற்போது சோசியல் மீடியாவில் பெரும் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் நபர்கள் நண்பர்களாகவே இருப்பார்கள் எனபதற்கு உதாரணமாக இருப்பதாக நெட்டிசன்கள் கலைத்து வருகின்றனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை