வீடியோ : லக்னோ மைதானத்தை சுற்றிக்காட்டி பழையதை நினைவு கூர்ந்த கேஎல் ராகுல்.
உலக கோப்பை 2023 தொடரில் இந்தியா சிறப்பான அணியாக திகழ்ந்து வருகிறது.இதுவரையில் நடந்த 5 போட்டியில் இந்திய சிறப்பாக விளையாடி 5 போட்டியிலும் வெற்றி பெற்று அசைக்க முடியாத ஒரு அணியாக இருந்து வருகிறது. மேலும் இந்தியா அரையிறுதி போட்டிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லல
உலக கோப்பை 2023 தொடரில் இந்தியா சிறப்பான அணியாக திகழ்ந்து வருகிறது.இதுவரையில் நடந்த 5 போட்டியில் இந்திய சிறப்பாக விளையாடி 5 போட்டியிலும் வெற்றி பெற்று அசைக்க முடியாத ஒரு அணியாக இருந்து வருகிறது. மேலும் இந்தியா அரையிறுதி போட்டிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம். இதனால் வரும் போட்டிகளில் சில முக்கிய வீரர்களுக்கு இந்திய அணி ஓய்வு கொடுக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
இந்நிலையில் இந்தியா நாளை 6வது போட்டியாக இந்தியா vs இங்கிலாந்து அணிகள் லக்னோ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெறுமாயின் 6 தொடர் போட்டிகளை இந்தியா வென்றிருக்கும். அதே சமயம் இங்கிலந்து அணிக்கும் இது முக்கியமான போட்டியாகும். இந்நிலையில் லக்னோ மைதானத்தில் பயிற்சி செய்து வரும் இந்திய அணியின் வீரர் கேஎல் ராகுல் சிறப்பு போட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.
அவர் பேசுகையில் “நான் மைதானத்தில் நுழைந்ததும், கொஞ்சம் பயிற்சி செய்ய வேண்டியிருந்தது, என் பயிற்சியாளர் ரஜ்னீஷ் சாரிடம் என் இதயம் துடிக்கிறது என்று சொன்னேன். கடந்த முறை நான் இந்த மைதானத்தில் இருந்தபோது, எனக்கு பெரிய அனுபவம் இல்லை அல்லது அவ்வளவு பெரிய அனுபவம் இல்லை. எனது கேரியரில் ஒரு கசப்பான அனுபவம்.அந்த காயம் எனக்கும் எனது கேரியருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதனால் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அவ்வளவு பெரிய தருணம் இல்லை அடிக்கடி. விளையாட்டிலிருந்து விலகிச் செல்ல வேண்டிய நேரத்தில் இது வந்தது என்பதை நான் உணர்ந்தேன், ஏனென்றால் என்னுடன் மனரீதியாக நிறைய நடக்கிறது மற்றும் எனது வாழ்க்கையில் முதல்முறையாக என்னிடம் பதில்கள் இல்லை என்று உணர்ந்தேன் என்றார் கேஎல் ராகுல்.
KL Rahul is back to a ground that has given him life lessons & bittersweet memories 🏟️
— BCCI (@BCCI) October 28, 2023
On Sunday, he wants to make memories that he'll remember only for the good 👌👌
Muskuraiye, KL Rahul Lucknow mein hai 🤗
WATCH 🎥🔽 – By @28anand #TeamIndia | #CWC23 | #INDvENG
இந்நிலையில் கடந்த ஐபிஎல் 2023தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது கேஎல் ராகுலுக்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஐபிஎல் 2023 மற்றும் WTC இறுதிப் போட்டிக்கான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அதற்கு பிறகு ஆசிய போட்டியில் அதிரடி காட்டிய கேஎல் ராகுல், உலக கோப்பையிலும் அதிரடியாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.