வீடியோ : இஷான் கிஷன் அடித்த பந்தால் காயமடைந்த மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா.
ஐபிஎல் 2023 க்கான 25 லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் எதிர்கொண்டன. இப்போட்டியானது ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற சன்ரைசஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன் படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய வந்த
ஐபிஎல் 2023 க்கான 25 லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் எதிர்கொண்டன. இப்போட்டியானது ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற சன்ரைசஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன் படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய வந்தனர்.அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
மும்பை அணிக்காக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் சீரான இடைவெளியில் சில சிக்சர்களையும் மற்றும் பவுண்டரிகளையும் பறக்க விட்டனர். ரோஹித் ஷர்மா தனது அதிரடியான ஆட்டத்தின் முலம் ஐபிஎல்லில் தனது 6000 ரன்களை கடந்த நிலையிலே நடராஜனிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பிறகும் நிதானமாக விளையாடிய இஷான் கிஷன் 38 ரன்களிலே வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 7 ரன்களிலே வெளியேறி ரசிகர்களுக்கு எமற்றையே அளித்தார்.
ஒருபுறம் க்ரீன் மட்டுமே பொறுமையாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார்.இந்நிலையில் இவருடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மாவும் அணிக்காக ரன்களை சேர்த்து வந்தனர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 26 பந்துகளில் 50 ரன்களை பூர்த்தி செய்தனர். திலக் வர்மாவும் நிலைத்து நிற்க முடியமல் 37 ரன்களில் வெளியேறினார். யார் வெளியேறினாலும் நிதனகமாக விளையாடிய க்ரீன் 33 பந்துகளில் தனது அரை சத்தை பூர்த்தி செய்து அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். டிம் டேவிட் மற்றும் க்ரீன் இணைந்து கடைசி ஓவரை வீசிய நடராஜனின் பந்துகளை பறக்கவிட்டு வந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 192 ரன்களை குவித்தனர். க்ரீன் மட்டுமே 64 ரன்களை அடித்தார்.
ரோஹித் ஷர்மாவுக்கு காயம்
மும்பை அணி பேட்டிங்கின் போது மைதானத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்றது. ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் பந்துவீசிக்கொண்டிருந்தார்,கிஷான் ஒரு நேராக பந்தில் மார்கோவிடம் வீசினார், இஷான் கிஷன் அந்த பந்தை நேராக அடித்தார். பந்து நேராக ரோஹித்தின் இடது கால் பட்டைக்கு சென்றது. ரோஹித் பந்து வீசிய திசையிலிருந்து விலகிச் செல்ல முயன்றார், ஆனால் பந்திலிருந்து விலகிச் செல்ல முடியவில்லை. பந்து தாக்கியதில் ரோஹித் கீழே விழுந்தார். எனினும் அவருக்கு காயம் ஏற்படவில்லை.
ईशान ने किया रोहित शर्मा को घायल तो पत्नी रितिका के चेहरे पर छाई उदासी pic.twitter.com/xWIcXl7VCn
— Cricket Khelo (@cricketkhelo11) April 18, 2023
அதன் பிறகும் ரோஹித் ஷர்மா பில்டிங் செய்து கொண்டு இருக்கிறார். சன்ரைசஸ் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த வண்ணமே உள்ளது.