வீடியோ : இதனை எதிர்பார்க்கவே இல்லை..தமிழ்நாடு மக்கள் குறித்து பாகிஸ்தான் ஹாக்கி பயிற்சியாளர் நெகிழ்ச்சி.
கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக்
கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.
ஆனால் இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள அரசியல் பிரச்சனை காரணமாக பாஸ்கிதான் அணி இத்தாவிற்கோ அல்லது இந்திய அணி பாஸ்கிதான் சென்றோ விளையாடுவதில்லை. ஆனால் வரும் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியா வருகிறது. இந்நிலையில் அதற்கு முன்னதாக ஹீரோ ஏசியன் சாம்பியன்ஸ் டிராபி போட்டியானது சென்னையில் தொடங்கியுள்ளது. இதற்கான பாஸ்கிதான் ஹாக்கி அணியானது சென்னை வந்தது.
சென்னை வந்த அணியை பிரமாதமாக வரவேற்றனர். இந்நிலையில் தான் தமிழ் நாட்டு மக்கள் குறித்த பேசிய அவர் கூறுகையில் இது போன்ற வசதிகளை தான் எதிர்பார்க்க வில்லை என்றும், இங்குள்ள மக்கள் தங்களுடைய அணிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள் என்று கூறிய அவர் இங்குள்ள ரசிகர்கள் எங்களை மரியாதையுடன் நடத்தினார்கள் என்றும், அணி வீர்களுக்கு வழங்கப்பட உணவு தங்களை பாகிஸ்தானில் இருப்பது போலவே உணவளிப்பது போன்று அவ்வளவு சுவையாக இருந்தது என்றும் கூறினார்.
#WATCH | Chennai, Tamil Nadu | Saqlain Muhammad, Assistant Coach of Pakistan Hockey team that is participating in the Asian Champions Trophy, says, "It feels good to be here. When I came here the last time, in 2006-07, I was the Captain…We are excited to be here…The crowd in… pic.twitter.com/Q3MewANMFx
— ANI (@ANI) August 2, 2023
மேலும் பேசிய அவர் நாங்கள் இங்கே கடந்த 2005ஆம் ஆண்டு ஹாக்கி விளையாட வந்திருக்கிறோம் என்றும், அப்போது நான் கேப்டனாக இருதேன். சென்னை அதிகமான மாற்றங்களை கண்டுள்ளது. அது அனைத்தும் நன்மைக்கு தான். நான் 35 இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் விளையாடியுள்ளேன், அவை அனைத்தையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி எப்போதுமே சுவாரசியமாக இருக்கும்.
1999 சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்தியாவில் விளையாடிய எனது சிறந்த நினைவாகும். அப்போது போபாலில் விளையாடினோம். தொடக்க நிமிடத்தில் இந்தியா கோல் அடிக்க, நாங்கள் 5-1 என்ற கோல் கணக்கில் பதிலளித்தோம். நாங்கள் வழங்கிய தரமான ஹாக்கியை இங்குள்ள ரசிர்கள் பாராட்டினார்கள். அது எனக்கு இனமும் நினைவில் இருக்கிறது. கண்டிப்பாக இந்த போட்டியில் நாங்கள் வெற்றியடைவோம் என்றார் பாகிஸ்தான் பயிற்சியாளர் ஷக்லின்.