வீடியோ : சோசியல் மீடியாவில் வைரலாகும் ரோஹித் சர்மா வீடியோ – பறக்கும் மீம்ஸ்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் போட்டியானது குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் களமிறங்கிய இந்தியஅணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா அற்புதமாக தொடங்கினாலும் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இ
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் போட்டியானது குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் களமிறங்கிய இந்தியஅணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா அற்புதமாக தொடங்கினாலும் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. அந்த நேரத்தில் கைகோர்த்த விராட் மற்றும் ஜடேஜா இருவரும் இணைத்து பட்டனர் ஷிப் அமைத்தனர் இதில் விராட் சதம் விளாசினார்.
இதன் மூலம் தன்னுடைய 500வது சர்வதேச போட்டியில் 100 அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் எப்போதும் விக்கெட்டுகள் விழுவதை தடுத்து நிறுத்திய ஜடேஜாவும் 152 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். இவரது விக்கெட்டிற்கு பிறகு கடந்த போட்டியில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த இஷான் கிஷன் இந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் அதற்கு பிறகு வந்த அஸ்வின் திறமையான விளையாட்டை விளையாடி 78 பந்துகளில் 56 ரன்களை விளாசினார்.
இதனால் இந்திய அணியானது 128 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்களை விளாசியது. இதனையடுத்து உங்களுடைய முதல் இன்னிங்கை ஆட வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான தொடக்கத்தை கொடுக்க அப்போது மழை குறுக்கிட்டு போட்டியானது பாதியில் நிறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு இந்தியா அணிக்கு விக்கெட்டுகள் என்பது மிகவும் குறைவாகவே விழுந்தது.
இருந்த போதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை 255 ரன்களில் ஆல் அவுட் செய்த இந்தியா பின்னர் வேகமாக விளையாடி 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை குவித்து டிக்ளர் கொடுத்தது. ஆனால் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மழை மூன்றாவது அணியாக வந்து ஆட்டத்தை சொதப்பிய நிலையில் 2வது டேஸ்ட் போட்டி டிராவானது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
Rohit sharma lost his memory permanently 🙂 @rohit pic.twitter.com/NRtNssUpZG
— Harish Joshi (@Harish_JOSHI55) July 24, 2023
வைரல் வீடியோ :
இந்நிலையில் இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் சுப்மன் கில் மற்றும் இசான் கிசான் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு 300க்கும் மேற்பட்ட ரன்களை முன்னிலையாக பெற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஃபெவிலியனில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா திடீரென ஜன்னல் கதவை திறந்து விட்டு என்ன நடக்கிறது என்பதை பார்த்தார். ஆனால் அதை அவர் பார்த்த விதம் தான் அனைத்து ரசிகர்களையும் சிரிக்க வைக்கிறது என்றே சொல்லலாம்.
ஏனெனில் ஏதோ நன்றாக தூங்கியவரை திடீரென தூக்கத்திலிருந்து எழுந்திரிப்பா என்று எழுப்பி விட்டது போல் என்ன நடக்கிறது என்று ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்த அவருடைய தலை முடிகள் அனைத்தும் கலைந்திருந்தது. அதை விட “என்ன நடக்கிறது” என்று பார்க்கும் போது வாயை திறந்து கொண்டே அவர் கொடுத்த ரியாக்சன் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது என்றே. சொல்லலாம் மேலும் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் பல விதமான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.