வீடியோ : மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு, சிக்னல் செய்த ஷாகிப் அல் ஹாசன் – தினேஷ் கார்த்திக் கொடுத்த ரியாக்சன்.
இந்தியாவில் எப்படி இளம் வீரர்களை கண்டறியும் பொருட்டு ஐபிஎல் என்ற டி20 தொடர் உருவாக்கப்பட்டது, அந்த வகையில் இலங்கையில் தரமான அடுத்த தலைமுறை வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் லங்கா பிரீமியர் லீக் எனும் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் தற்போது துவங்கியுள்ள 2023 சீசனில்
இந்தியாவில் எப்படி இளம் வீரர்களை கண்டறியும் பொருட்டு ஐபிஎல் என்ற டி20 தொடர் உருவாக்கப்பட்டது, அந்த வகையில் இலங்கையில் தரமான அடுத்த தலைமுறை வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் லங்கா பிரீமியர் லீக் எனும் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் தற்போது துவங்கியுள்ள 2023 சீசனில் ஜூலை 31ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2வது லீக் போட்டியில் கால்லே கிளாடியேட்டர் மற்றும் தம்புலா ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின.
அதில் முதலில் பேட்டிங் செய்த கால்லே 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 180/5 ரன்கள் குவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய தம்புலா அணியும் 20 ஓவர்களில் கடுமையாக போராடி சரியாக 180 ரன்கள் எடுத்ததால் போட்டி டையில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் வைக்கப்பட்ட நிலையில் அதில் தம்புலா 9/1 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பின் பினுரா பெர்னாண்டோ வீசிய சூப்பர் ஓவரில் ராஜபக்சா 10(2) ரன்கள் எடுத்து கால்லே அணியை வெற்றி பெற செய்தார்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு ஆச்சரியமான விஷயமும் நடந்தது. அதாவது தம்புலா விளையாடிக்கொண்டிருக்கும் போது வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசன் 5வது ஓவரை வீசுவதற்காக வந்தார். அப்போது திடீரென மிகப்பெரிய பாம்பு ஒன்று எப்படியோ மைதானத்திற்குள் உள்ளே புகுந்தது விட்டது. அதனால் மைதானத்திற்குள் பாம்பு வந்து விட்டதால் பந்து வீச முடியாது என சாகிப் அல் ஹசன் கையில் படம் எடுத்து சைகை காட்டியதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
Hello, stranger. Where is your accreditation card? 🐍
— LPL – Lanka Premier League (@LPLT20) July 31, 2023
Even the Sri Lankan wildlife can't resist the action at the LPL! 🏏#LPL2023 #LiveTheAction pic.twitter.com/R9Fa5k1D3p
இருப்பினும் பெரிய அளவில் தொல்லை கொடுக்காத அந்த பாம்பு வெளியே சென்று விட்டது. இதற்கு முன் பல கிரிக்கெட் போட்டிகளில் பறவை, நாய், ஏன் தேனீக்கள் கூட மைத்தனத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்திருக்கிறது. அவற்றை போலவே இப்போட்டியில் பாம்பு வந்தது வீரர்களையும் வர்ணனையாளர்களையும் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. அதனால் வழக்கம் போல அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அதை பார்த்த இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் “நாகின் மீண்டும் வந்து விட்டது. இருப்பினும் அது வங்கதேசத்தில் இருக்குமோ என்று நான் நினைத்தேன் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து பதிவிட்டிருந்தார். அதற்கு காரணம் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற நிதஹாஸ் முத்தரப்பு டி20 தொடரின் முக்கிய போட்டியில் வென்ற மமதையில் சாகிப், முஸ்பிகர் ரஹீம் போன்ற வங்கதேச வீரர்கள் பாம்பு நடனமாடி இலங்கை அணியினர் மற்றும் ரசிகர்களை சொந்த மண்ணில் அவமானப்படுத்தினர்.
அந்த நிலையில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் வங்கதேசத்திடம் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை கடைசி நேரத்தில் 29(8) ரன்களை விளையாசிய தினேஷ் கார்த்திக் வெற்றி பெற்று கொடுத்தார் அப்போது இந்தியாவின் வெற்றியை தங்களது வெற்றியை போல் கருதிய இலங்கை ரசிகர்கள் வங்கதேசத்தினருக்கு அதே பாம்பு நடனத்தை ஆடி பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் தான் இந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பெருமளவு வைரலாகி வருகிறது.