வீடியோ : அவுட்டா? அவுட் இல்லையா? சர்ச்சையான கேட்ச்சை பிடித்த பென் ஸ்டோக்ஸ் – கடைசில இப்படி பண்ணிட்டிங்களே?
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் அடுத்த 3 வது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஷஸ் 5வது போட்டியானது கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் டா
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் அடுத்த 3 வது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஷஸ் 5வது போட்டியானது கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை முடிவு செய்தது. இந்நிலையில் முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 283 ரன்கள் அடித்த நிலையில் இரண்டவது இன்னிங்கில் 295 ரன்களை அடித்தது ஆஸ்திரேலியா.
இதனை தொடர்ந்து இரண்டவது இன்னிங்கில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி 395 ரன்களை விளாசியது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்கை ஆடிவரும் ஆஸ்திரேலியா ஏற்கனவே கிட்டத்தட்ட 238 ரன்களை 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து எடுத்து விட்டது. இந்நிலையில் இந்த போட்டி மழை காரணமாக தற்போது நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணிக்கு இந்தப்போட்டியில் வெற்றிபெற 7 விக்கெட்டுகள் தேவை.
இதனால் மழை நின்ற பிறகு கண்டிப்பாக இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை வீழ்த்தவே முயற்சி செய்யும். ஆனால் பந்துவீச்சாளர்கள் அதற்கு சரியான பந்துகளை வீழ்த்தினால் மட்டுமே இது முடியும். இருந்த போதிலும் நேரம் என்பது மிகவும் குறைவாக இருப்பதினால் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் 65 ஓவரில் சர்ச்சையான ஒரு சம்பவம் நடந்தது. அதாவது 66வது ஓவரை மொயில் அலி வீச வந்தார். அப்போது ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அதன் போது மொயின் அலி வீசிய பந்தை ஸ்மித் தடுக்க அது அவனுடைய கைகளில் பட்டு மேலே எகிறியது. இந்த பந்தை பின்னல் நின்றிருந்த பென் ஸ்டோக்ஸ் லாபகமாக பிடித்தார். ஆனால் அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை.
Out or not out? 🤷♂️ #EnglandCricket| #Ashes pic.twitter.com/q2XCJuUpxM
— England Cricket (@englandcricket) July 31, 2023
இதனால் இங்கிலாந்து அணி DRS எடுத்தது. குடில் பந்து ஸ்மித் கைகளில் பட்டு மேலே எகிறி பென் ஸ்டோக்ஸ் கேட்ச்சை பிடித்தெல்லாம் சரி ஆனால் அதற்கு பிறகு அவர் விக்கெட் எடுத்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் கீழே விட்டுவிட்டார். இதனை பார்த்த 3ஆம் அம்பயர் நாட் அவுட் கொடுத்தார். ஒருவேளை இந்த பந்தை ஸ்மித் அப்படியே கைகளில் வைத்திருந்தால் கண்டிப்பாக ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தி இருக்கலாம்.
இருந்த போதிலும் இது கேட்ச் என்ற பல ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரம் இது நாட் அவுட் அவர் பந்தி பிடித்த வேகத்திலேயே கீழே விட்டுவிட்டார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா போட்டியானது தற்போது மழை காரணமாக தடைபட்டுள்ளது. மழை இப்படியே இருந்தது என்றால் இங்கிலந்து அணி இந்த தொடரில் தோல்வியை தழுவுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை.