வீடியோ : ஆஷஸ் போட்டியில் இந்திய அம்பயர் எடுத்த முடிவு..திட்டி தீர்க்கும் ரசிகர்கள் – பாராட்டிய அஸ்வின்.

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஷஸ் 5வது போட்டியானது நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை முடிவு செய்தது. இந்நிலையில் பொறுமையாக விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள்

By ·

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஷஸ் 5வது போட்டியானது நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை முடிவு செய்தது. இந்நிலையில் பொறுமையாக விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் மற்றும் பேன் டக்கட் இருவரும் இணைந்து 50 பார்ட்னர்ஷிப் கொண்டவர பின்னர் பென் டக்கட் 41(41) ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கு பிறகு தான் இங்கிலாந்தின் சரிவு ஆரம்பமானது.

இவர்க்கு பின்னர் ஜாக் கிராலி 22(37) ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து ஜோ ரூட்டும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆட்டமிழந்தார். இதனால் ஒருகட்டத்தில் 73 ரன்களுக்கு 3 விக்கெட் என தடுமாறியது இங்கிலாந்து. பின்னர் ஜோடி சேர்ந்த மெயின் அலி மற்றும் ஹாரி ப்ரூக் இருவரும் திறமையாக விளையாட ஹாரி ப்ரூக் 50(44) அரை சதம் விளாசினார். இவர்கள் இருவரும் சிறப்பாக பார்ட்னர்ஷிப்பை கொண்டு சென்றாலும் மெயின் அலி 34(47) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இப்படி ஒரு பக்கம் விக்கெட்டுகளாக விழுக திறமையாக விளாடிய ஹாரி ப்ரூக் 85(91) ரன்களின் போது ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மார்க் வுட் 28(29) ரன்களிலும் , கிரிஸ் வோக்ஸ் 26(32) ரன்களிலும் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 295 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனையடுத்த களமிறங்கிய அஸ்திரலியாவின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி 47(157) என ஆட்டமிழக்க டேவிட் வார்னர் துரதிஷ்டவசமாக மீண்டும் குறைவான ரன்களிலேயே ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்து மரன்ஸ் 9(82) ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 4(5) ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தாலும், பொறுமையான விளையாட்டை விளையாடிய ஸ்மித் 71(123) ரன்களை விளாசினார். இவரை தவிர பாட் கம்மின்ஸ் 36(86) ரன்களிலும் டாட் மர்பி 34(39) ரன்களை தவிர யாரும் பெரிதாக ரன்கள் அடிக்காத நிலையில் ஆஸ்திரேலியா 103.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு சர்ச்சையான சம்பவம் நடந்தது.

சர்ச்சையான ரன் அவுட் :

அதாவது ஆஸ்திரேலியா விளையாடிக்கொண்டிருந்த போது ஸ்மித் பந்தை அடித்து விட்டு இரண்டாவது ரன் எடுக்க ஓடினர், அந்தநேரம் பார்த்து இங்கிலாந்தின் பில்டர் பந்தை விக்கெட் கீப்பரிடம் எரிய அது நேராக ஸ்டெம்புகளை பதம் பார்த்தது. இது அங்குள்ள ஸ்க்ரீனிலேயே தெரிந்ததால் இங்கிலாந்து அணியின் வீரர்கள் அது அவுட் என்று மகிழ்ச்சியடிந்தனர், ஸ்மித்தும் கிரீஸை விட்டு செயல் ஆரம்பித்தார். ஆனால் அப்போதுதான் 3வது அம்பயராக இருந்த இந்தியாவின் நிதின் மேனன் கவனமாக அந்த விக்கெட்டை பரிசோதடித்தார்.

பாராட்டிய அஸ்வின் :

அப்படி பார்க்கையில் நிதின் மேனன் அதற்கு நாட் அவுட் கொடுக்க இங்கிலாந்து ரசிங்கர்களின் மனம் உடைந்து போனது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகிய நிலையில் பலரும் அம்பயரை திட்டி வரும் நிலையில் தான் இந்தியாவின் பந்துவீச்சாளர் அஸ்வின் அம்பயரை பாராட்டி பதிவு ஒன்றி ட்விட்டரில் போட்டுள்ளார். இந்நிலையில் அந்த விக்கெட்டிற்கு முக்கியமான ஒரு காரணம் பெயில்கள் பந்து படுவதற்கு முன்னதாகவே தாக்கப்பட்டதுதான் என்று சொல்லப்படுகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை