வீடியோ :சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த WWE சூப்பர்ஸ்டார் Triple H.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதில் பல சாதனைகள் இரன்று வரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது. இதனால் சச்சின் டெண்டுல்கரின் புகழ் கிரிக்கெட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பர

By ·

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதில் பல சாதனைகள் இரன்று வரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது. இதனால் சச்சின் டெண்டுல்கரின் புகழ் கிரிக்கெட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பரவி உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தான் டெண்டுல்கரின் பிறந்தநாளுக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்த WWE சூப்பர் ஸ்டார் டிரிபிள் எச்

சச்சின் டெண்டுல்கர்

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 50 வயது. வெறும் 16 வயது 205 நாட்களில் இந்திய அணிக்காக அறிமுகமான சச்சின், 24 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் சச்சின் டெண்டுல்கருக்கு உண்டு. மார்ச் 16, 2012 அன்று டாக்காவில் பங்களாதேஷுக்கு எதிராக சச்சின் இந்த சாதனையை நிகழ்த்தினார். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 76 முறை (டெஸ்ட்-15, ஒருநாள்-62) ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். இந்திய அணியில் விராட் கோலி தற்போது இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் பல கிரிக்கெட் சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்ற பெருமைக்குரியவர், அவை விரைவில் உடைக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

வாழ்த்து தெரிவித்த டிரிபிள் எச்

இந்தியாவில் WWE இன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனமான Sony Sports Network வெளியிட்ட வீடியோவில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பாராட்டியும் புகழ்ந்தும் பேசிய வீடியோவை சோனி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. டிரிபிள் எச் “இந்திய கிரிக்கெட்ட்டின் கடவுளுக்கு” ஒரு சிறப்பு செய்தி என்றும் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

“சச்சின், மாஸ்டர் பிளாஸ்டர், என் நண்பரே! அனைத்து WWE யுனிவர்ஸ் சார்பாக, 50வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! மற்றொரு நம்பமுடியாத மைல்கல் என்றும், கிரிக்கெட் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உலகெங்கிலும் உள்ள தலைமுறைகளுக்கு நீங்கள் முன் மாதிரி என்றும்,. பிறந்தநாள் வாழ்த்துக்கள், சச்சின்!,” எனவும் டிரிபிள் எச் அந்த விடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவனது அனைத்து கிரிக்கெட் மற்றும் WWE ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுதிள்ளது.  

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை