விமர்சித்தவர்களின் வாயை அடைக்க எனக்கு தெரியும். அதனை நான் 80,000 பேருக்கு திருப்பி தர தேவையில்லை – நவீன் உல் ஹக் அதிரடி பேட்டி.

ஐபிஎல் 2023 சீசனின் போட்டி RCB மற்றும் LSG இடையே கடும் போட்டி நிலவியது. அதன் போது ஒரு போட்டியில் விராட் கோலி மற்றும் ஆப்கானித்தான் வீரர் நவீன்-உல்-ஹக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கம்பீர் நவீன் உல் ஹக், விராட் கோலி ஆகிய மொவருக்கும் அபராதம் விதிக்கப்

By ·

ஐபிஎல் 2023 சீசனின் போட்டி RCB மற்றும் LSG இடையே கடும் போட்டி நிலவியது. அதன் போது ஒரு போட்டியில் விராட் கோலி மற்றும் ஆப்கானித்தான் வீரர் நவீன்-உல்-ஹக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கம்பீர் நவீன் உல் ஹக், விராட் கோலி ஆகிய மொவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. குறிப்பாக ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக கோலி மற்றும் கம்பீரின் போட்டிக் கட்டணத்தில் 100% அபராதம் விதிக்கப்பட்டது, நவீனுக்கு 50% அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நவீன் உல் ஹக் விராட் கோலியுடனான வாக்குவாதம் குறித்தும், அதற்கு பின்னர் நடந்தது குறித்தும் பேசியுள்ளார். அவர் கூறுகையில் “போட்டியின் போதும் அதற்குப் பின்னரும் அவர் அதையெல்லாம் சொல்லியிருக்கக் கூடாது. நான் சண்டையைத் தொடங்கவில்லை. போட்டி முடிந்து நாங்கள் கைகுலுக்கி கொண்டிருக்கும்போது, ​​விராட் கோலி தான் சண்டையை தொடங்கினார். அதனை அபராதத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு ​​சண்டையை ஆரம்பித்தது யார் என்பது புரியும்.

பொதுவாக நான் யாரையும் ஸ்லெட்ஜ் செய்வதில்லை, நான் ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் ஒரு பந்து வீச்சாளர் என்பதால் நான் பந்துவீசும்போது மட்டுமே எதிரணியின் பேட்டரிடம் பேசுவேன். ஆனால் அந்த போட்டியின் போது நான் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதே போல நான் யாரையும் ஸ்லெட் செய்யவில்லை.

அங்கிருந்த வீரர்களுக்கு நான் எப்படிச் சூழ்நிலையைச் சமாளித்தேன் என்பது அவர்களுக்குத் தெரியும். நான் பேட்டிங் செய்யும் போதும் போட்டிங் செய்த பிறகும் நான் என்னுடயை அமைதியை இழக்கவில்லை. போட்டிக்கு பிறகு நான் என்ன செய்தேன் என்பதை அனைவரும் பார்க்க முடியும். நான் கோலியிடம் கைகொடுக்கும் போது அவர் என் கையை வலுக்கட்டாயமாகப் பிடித்தார், நானும் ஒரு மனிதன்தான், எனவே அதே போல நானும் செய்து விட்டேன் என்றார் நவீன் உல் ஹக்.

சோசியல் மீடியா பதிவு :

மேலும் சோசியல் மீடியாவில் நடந்த சில சர்ச்சையான விஷியங்கள் குறித்து பேசுகையில் “நான் இந்த சம்பவத்திற்குப் பிறகு வந்த ட்ரோல்கள் என்னை சிறிதும் பாதிக்கவில்லை. என்னை விமர்சனம் செய்பவர்களின் வாயை அடைக்க எனக்கு தெரியும். நான் அதை 80,000 பேருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை. நான் எனது கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தினேன், எனது திறமைகளில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது எனவே தொடர்ந்து என்னுடைய விளையாட்டை சரியாக விளையாட முயற்சி செய்து வருகிறேன்.

அதே போல நான் ஒருபோதும் சோசியல் மீடியாவில் பிரச்சனைகளை இல்லுக்கவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் என்னை பிடிக்காதவர்கள் எண்னை பற்றி மோசமாகப் பேசத் தொடங்கியபோது அதனை பார்த்துக்கொண்டு என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் போட்டிருந்த பதிவிலும் கூட நான் எந்த ஒரு நபரின் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை. நான் எனது மாம்பழங்களை ரசித்துக்கொண்டிருந்தேன் என்று கூறினார் ரவீன் உல் ஹக்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை