வீடியோ : அற்புதமான வெற்றிக்கு பிறகு ஜெய்ஸ்வாலுக்கு அறிவுரை கூறிய விராட் கோலி.

ஐபிஎல் 2023 தொடரில் 60 வது ஆட்டத்தில் பெங்களூரு அணியை ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் அற்புதமான விளையாடிய ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை விளாசியது. அதற்கு பிறகு ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்கமே அதிர்ச்சியாக இருந்த நிலையில் 10.3 ஓவர

By ·

ஐபிஎல் 2023 தொடரில் 60 வது ஆட்டத்தில் பெங்களூரு அணியை ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் அற்புதமான விளையாடிய ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை விளாசியது. அதற்கு பிறகு ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்கமே அதிர்ச்சியாக இருந்த நிலையில் 10.3 ஓவர்களில் 50 ரன்களில் ஆல் அவுட்டானது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ராஜஸ்தான் தொடக்க வீரர்கள் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பட்டலர் ஆட்டமிழந்ததுதான் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த போட்டிகளில் பட்லரும் சரி யஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலும் சரி சரியான ஆட்டத்தை விளையாடி எதிரணியை கலங்க வாய்த்த நிலையில். ராஜஸ்தானின் தொடக்க வீரர்கள் இருவருமே ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆதமிழ்ந்தனர்.

இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு விராட் கோலியை சந்தித்தார் ஜெய்ஸ்வால். அப்போது விராட் கோலியும் சில அறிவுரைகளையும் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கூறினார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொடியை பொறுத்தவரையில் முதலில் பேட் செய்த விராட் கோலி 18(19) எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார் வருக்கு பிறகு களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் வழக்கம் போல அதிரடியாக விளையாடினார்.

டு பிளேஸிஸ் 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 2 சிக்சருடன் 55 (44) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு பிறகு வந்த மகிபால் லோம்ரர் 1 (2) ரன்னிலும் தினேஷ் கார்த்திக் அதே ஓவரில் டக் அவுட்டாகினார். இருப்பினும் மேக்ஸ்வெல் 5 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு 54 (33) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு பெங்களூரு அணி 171 ரன்கள் எடுத்தனர்.

இந்நிலையில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜாதான் அணி மிகவும் மோசமான தொடக்கத்தை பெற்றது. ராஜஸ்தான் அணியில் ஷிம்ரன் ஹெட்மயர் தவிர பின்னர் வந்த எந்த பேட்ஸ்மேன்களினாலும் ஆர்சிபியின் பேட்டிங்கை தாக்கு புடிக்க முடியாமல் 10.3 ஓவர்களில் 59 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது ராஜஸ்தான்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை