வீடியோ : மைதானத்தில் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்ட விராட் vs கம்பீர் – இவர்களுக்குள் என்னதான் பகை?

விராட் கோலிக்கும் கம்பீருக்கும் ஏற்கனவே சில பிரச்சனைகள் இருந்த நிலையில் அது வாக்குவாதமாக மாறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் 2023தொடரின் 43வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ

By ·

விராட் கோலிக்கும் கம்பீருக்கும் ஏற்கனவே சில பிரச்சனைகள் இருந்த நிலையில் அது வாக்குவாதமாக மாறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் 2023தொடரின் 43வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் அணி தன்னுடைய மைதானத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது. ஆனால் அதற்கு பிறகுதான் பெரிய சம்பவம் ஓன்று நடந்தது.

இந்நிலையில் தான் 17 வது ஓவரின் போது லக்னோ பேட்ஸ்மேன் நவின் உல் ஹக் மற்றும் விராட் கோலிக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது அம்பயர்களும் சக வீரர்களும் வந்து பெரிய வாக்குவாதம் ஏற்படாத வாறு இருவரையும் பிரித்து விட்டனர். அதற்கு பிறகு தோல்வியடைந்த லக்னோ அணியும் ஆர்சியி அணியின் பரஸ்பாரமாக கைகொடுப்பதற்கு சென்றது. ஆனால் அங்கேயும் விராட் கோலி மற்றும் நவின் உல் ஹக் வாக்குவாதம் நடந்தது. அப்போது நவின் உல் ஹக் விராட் கோலியை பிடிக்க முயன்றார்.

இந்த சம்பவம் ஓய்ந்த பிறகு லக்னோ அணியின் பேட்ஸ்மேன் கைல் மேயர்ஸ் விராட் கோலியுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே கெளதம் கம்பீர் கைல் மேயர்ஸின் கைகளை பிடித்து கூட்டி சென்றார். அதற்கு பிறகு விராட் கோலிக்கும் கம்பீருக்கும் வாங்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மைதானத்தில் இருந்த அனைவரும் அங்கு கூட கோலி மற்றும் கம்பீருக்கு இடையே வாங்குவாதம் முற்றுகையில் சக வீரர்கள் இந்த பிரச்னை மேலும் பெரிதாக வண்ணம் இருவரையும் பிரித்து அழைத்து சென்றனர். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

போட்டியை பற்றி பேசுகையில் டாஸ் வென்ற கேப்டன் டு பிளெசிஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். எப்போதும் போல தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி மற்றும் ஃபாஃப் இன்னிங்ஸை தொடங்கினர். இரு வீரர்களும் ஜாக்கிரதையாக ரன்களை குவிக்க தொடங்கினர். ​​இன்னிங்ஸின் ஒன்பதாவது ஓவரின் கடைசி பந்தில் விராட் கோலியை ஸ்டம்பிங் அவுட் செய்தார் ரவி பிஷ்னோய். எந்த பேட்ஸ்மேனும் சரியாக விளையாடாத நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 126 ரன்கள் எடுத்தது.

அதற்கு பிறகு ரன்கள் எதுவும் செல்லாத நிலையில் 19வது ஓவரில் நவீன் விக்கெட் விழுக அடிபட்ட காயத்துடன் மைதானத்தில் இறங்கி விளையாடினார் லக்னோ கேட்டான் கேஎல் ராகுல். இருந்த போதிலும் அவருக்கு காலில் அடிபட்டதினால் சரியாக ஆடமுடியவில்லை. எனவே லக்னோ அணி 19.5 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. அதற்கு பிறகு தான் விராட் கோலிக்கும் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை