RCB அணி வீரர்களுடன் வேடிக்கையாக பந்துவீசய விராட் வைரலாகும் வீடியோ இதோ.

ஐபிஎல் 2023 சீசன் தற்போது இந்தியாவில் கோலமலமாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் போட்டியில் இருக்கும் சிறப்பு உலகில் உள்ள அணைத்து அணிகளில் இருந்தும் பல வீரர்கள் இந்திய அணிகளுக்காக விளையாடுவார்கள். இதனால் மற்ற டி20 போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகளுக்கு அதிகமான ரசி

By ·

ஐபிஎல் 2023 சீசன் தற்போது இந்தியாவில் கோலமலமாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் போட்டியில் இருக்கும் சிறப்பு உலகில் உள்ள அணைத்து அணிகளில் இருந்தும் பல வீரர்கள் இந்திய அணிகளுக்காக விளையாடுவார்கள். இதனால் மற்ற டி20 போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகளுக்கு அதிகமான ரசிகர் கூட்டமும் ஆதரவும் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எந்த அணி பிளே ஆஃப் செல்லவும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் மிக முக்கியமான அணிகளில் ஓன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த அணி ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து இருந்தாலும் ஒரு முறை கூட ஐபிஎல் வெல்லத்தை அணி என்று கூறலாம்.

இந்தியாவில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி முதல் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே போன்ற வீரர்கள் ஆர்சிபி அணியில் விளையாடி இருந்தாலும் இந்த அணியால் ஒருமுறை கூட ஐபிஎல் இறுதி போட்டியில் வெற்றியாளராக முடியவில்லை. விராட் கோலி இன்னும் இந்த அணிக்காக விளையாடி வருகிறார், மேலும் கேப்டனாகவும் விளையாடி வருகிறார். ஆனால் அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இம்முறையும் ஆர்சிபி மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். அதற்கேற்றபடி நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் ராஜாதான் அணியை வெறும் 59 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தன ஆர்சிபி இது ரசிகர்களுக்கு ஆதிசியான ஒட்டு விஹஸ்யமாக இருந்தது. இதற்கிடையில் தான் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ :

அந்த வீடியோவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கியமான வீரர்களான விராட் கோலி, தினேஷ் கார்த்திக், முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் வீடியோவில் காணப்படுகின்றனர். அதில் கார்த்திக் பந்துவீசிய பிறகு ஒரே அடியில் விக்கெட் அடிப்பதாக விராட் வர ஆனால் அவர் பந்துவீசாமல் நேரடியாக பக்கத்தில் வந்து அடிக்கிறார். எனவே இது ஒரு வேடிக்கையான வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு விளம்பரத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக இப்படி செய்தார்கள். அப்படிப்பட்ட நிலையில்தான் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு :

குறிப்பிடத்தக்க வகையில் ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளே ஆஃபிற்கு செல்ல முடியும். ஆனால் அதற்காக ஆர்சிபி அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். புள்ளிப்பட்டியலில் இந்த அணி தற்போது 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்த அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் தகுதி பெறலாம் என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை