விராட் கோலி 2024 டி20 உலக கோப்பையில் விளையாடுவாரா? பெரிய அப்டேட் கொடுத்த முன்னாள் பயிற்சியாளர்.
உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சில
உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.
கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். மேலும் இன்னும் சில காலங்களில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதம் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் விராட் கோலிக்கு தற்போது 34 வயதாகிறது.இதனால் வரும் காலங்களில் இவருக்கு பிறகு பார் இவருடைய இடத்தை இந்திய அணியில் பூர்த்தி செய்வார்கள் என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் இருக்கிறது.
மறுபுறம் சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளில் மந்தமான செயல்திறனை காட்டும் கோலி மீது அதிக விமர்சனங்கள் வருகின்றனர். குறிப்பாக டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இவரை நீக்கி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்தை, அவர் 2024 உலக கோப்பையில் இடம் பெறுவாரா என்ற கேள்வியையும் பல இந்திய ஜாம்பவான்கள் கூறும் நிலையில் தான் இந்த விஷயம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “நூறு சதவீதம் அவர் டி20 அணியில் இருக்க வேண்டும். முந்தைய டி20 உலகக் கோப்பையிலும், அந்த நெருக்கமான போட்டிகளிலும் அவர் என்ன செய்தார் என்பது நமக்கு தெரியும். எனவே அவர் டி20 கிரிக்கெட் மற்றும் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் அவர் விளையாட முடியாததற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. அழுத்தம் அதிகமாக இருக்கும் பெரிய சூழ்நிலைகளில், ஒரு சிறிய தவறு உங்களுக்கு பெரிய விலையை கொடுத்து விடும்.
அந்த சூழ்நிலைகளை இருந்து அணி கடந்து வர அனுபவம் வாய்த்த பெரிய வீரர்கள் தேவை. அந்த நேரத்தில் உங்கள் ஸ்ட்ரைக் ரேட் என்ன அல்லது ஐபிஎல்லில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது முக்கியமல்ல. பெரிய கேம்களில் உங்களுக்கு பெரிய மேட்ச் வீரர்கள் தேவை. இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் கோலி அத்தகைய ஒருவர் என்பது நிரூபித்தார். ஒவ்வொருவருக்கும் ரன்கள் அடிப்பதில் தனித்தனியான ஸ்டைலில் இருக்கிறது.
எனவே பெரிய ஷாட்டுகளை அடிப்பதால் மட்டுமே வெல்ல முடியும் என்று அர்த்தமல்ல. அப்படி இருந்திருந்தால் மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து டி20 உலகக் கோப்பைகளையும் வென்றிருக்கும். விராட் கோலி சிக்ஸர் அடிக்காமல் சதம் அடிக்கக்கூடிய பேட்ஸ்மேன். அவர் அதைச் செய்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக, அவர் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை, இருந்தும் ஒரு சதம் அடித்தார். தரையிலேயே பல ஷாட்டுகளி அடித்தார் அது விராட் கோலியைப் பற்றி பேசுகிறது என்றார் சஞ்சய் பாங்கர்.