என்னங்க நம்ம விராட் கோலி இப்படி மாறிட்டாரு.. பவுண்ட்டரி அடித்து விட்டு விராட் செய்த செயல் – வீடியோ இதோ.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணியானது முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான வெற்றியை பதிவு செய்தது. ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சதம் அடிக்க அவர்கள் இருவரும் அடுத்த ரன்களை கூட 2வது இன்னிங்கில் எடுக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியானது பெரும்
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணியானது முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான வெற்றியை பதிவு செய்தது. ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சதம் அடிக்க அவர்கள் இருவரும் அடுத்த ரன்களை கூட 2வது இன்னிங்கில் எடுக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியானது பெரும் தோல்வியை சந்தித்து. மேலும் இந்த போட்டியில் பெருதும் எதிர்பார்க்கப்பட்ட கிங் கோலி 76 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
சொல்லப்போனால் மைதானம் பேட்டிங் செய்வதற்கு ஏதுவானதாக இல்லை, அவுட் பில்ட் முகவும் மெதுவாகவே இருந்தது. இருந்த போதிலும் எந்த மைத்தனமாக இருந்தாலும் பந்துகளை நாலாபுறமும் பறக்க விடும் கோலி அதிசயமாக இந்த போட்டியில் பெரிதாக எந்த ஷாட்டுகளையும் எடுக்க வில்லை
குறிப்பிடதக்க வகையில் இந்த போட்டியின் விராட் கோலி விளையாடி கொண்டிருக்கும் போது அவருக்கு பவுடரிகளே வர வில்லை குறிப்பாக கடந்த உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் தான் ஆட்டமிழந்தது போல இந்த போட்டியிலும் ஆட்டமிழக்க கூடாது என்பதற்காக விராட் கோலி மிகவும் பொறுமையாக விளையாடினார். அதுவும் பவுன்டரி வராத்தற்க்கு ஒரு காரணம் என்றே சொல்லலாம். இதனிடையே தான் விராட் கோலி தன்னுடைய 81 வது பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் பவுண்டர் அடித்தார்.
Calling it a night! That celebration by @imVkohli after hitting his first boundary on the 81st ball.
— FanCode (@FanCode) July 13, 2023
.
.#INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/4SjNLZCMhx
அந்த பவுண்டரியை சதம் அடித்தது போன்று கொண்டாடினார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதற்கிடையே 40 ரன்கள் எடுத்திருந்த போதே கொடுத்த கேட்ச்சை வெஸ்ட் இண்டீஸ் வீரரிடம் ஆட்டமிழக்க வாய்ப்பு இருந்தது ஆனால் அவர்கள் தவற விட்டனர். பின்னர் 123வது பந்தில் 2வது பவுண்டரியை அடித்த நிலையில் அதன் பின் மீண்டும் அடுத்த 40 பந்துகள் வரை சிங்கிள் மட்டுமே எடுத்து சுதந்திரமாக விளையாட முடியாமல் திண்டாடினார்.
அதைத்தொடர்ந்து 163வது பந்தில் 3வது பவுண்டரியை அடித்த அவர் வானத்தை நோக்கி பார்த்து பெருமொச்ச்சு விட்டு கொண்டாடினார். ஆனால் 72 ரன்களில் கொடுத்த கேட்ச்சை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தவற விட்டதால் மீண்டும் ஒரு வாய்ப்பு விராட் கோலிக்கு கிடைத்து. இதனை சரியாக பயன்படுத்தி கொண்டு சதம் அடிப்பார் என்றிருந்த நிலையில் அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் 182 பந்துகளில் 76 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
— Nihari Korma (@NihariVsKorma) July 14, 2023
இந்நிலையில் ஒரு காலத்தில் எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து அதிடரியாக பவுண்டரிகளை அடித்து ரன் மெஷின் என்று பேரெடுத்த விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இப்படி விளையாடியது வருத்தத்தை கொடுத்து பலரும் “நம்முடைய கிங் கோலியா இப்படி மாறிவிட்டார் என்று பதிவிட்டு வருகின்றனர்.