IPL 2023 MI vs RCB : 11 வது முறையாக தோல்வி சோகத்தில் ரோஹித் | மகிழ்ச்சியில் விராட் வைரல் வீடியோ உள்ளே.
தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் மிகப்பெரிய வீரராக இருப்பவர் விராட் கோலி. இவர் ஆர்சிபி அணியின் கேப்டன் பதிவியிலிருந்து விலகிய நிலையில் அவர் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் ஆர்சிபியின் வெற்றிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர
தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் மிகப்பெரிய வீரராக இருப்பவர் விராட் கோலி. இவர் ஆர்சிபி அணியின் கேப்டன் பதிவியிலிருந்து விலகிய நிலையில் அவர் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் ஆர்சிபியின் வெற்றிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்சிபி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி வெற்றியுடன் போட்டியைத் தொடங்கியது.
இப்போட்டியில் அசத்திய இன்னிங்ஸ் ஆடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆர்சிபியின் இந்த வெற்றியின் நாயகனாகி ஆர்சிபிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
விராட் கோலியால் கதிகலங்கிய மும்பை :
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் போது, திலக் வர்மா மட்டும் நிலையாக தனி ஆளாக பேட்டிங் செய்து ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற மும்பை பேட்ஸ்மேன்களால் முன்பை போல 25 ரன்களைக் கூட கடக்க முடியவில்லை என்பது மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரோஹித் சர்மா, இஷான் கிஷான் போன்ற நட்சத்திர வீரர்கள் ஜொலிக்காமல் போனதே இதற்கு கரணம்.
இந்நிலையில் இந்த எளிதான இலக்கை துரத்திய ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களை கிழித்தெறிந்தது. இந்தப் போட்டியில் கேப்டன் ஃபாஃப் டுபிளேசியுடன் இணைந்து விராட் கோலி 148 ரன்களின் தொடக்க பார்ட்னர்ஷிப்பைப் பகிர்ந்து கொண்டார். இதன் போது, கேப்டன் ஃபாஃப் 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து கேப்டன்சி இன்னிங்ஸ் செய்தார். விராட் கோலி 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
An 8⃣-wicket victory at home to kick off the season in style 👌👌@RCBTweets are up and running in #TATAIPL 2023 🙌
— IndianPremierLeague (@IPL) April 2, 2023
Scorecard ▶️ https://t.co/ws391sGhme#TATAIPL | #RCBvMI pic.twitter.com/NlqIbjqHdC
தொடர்ந்து 11 முறை தோற்ற மும்பை :
ஆர்சிபியின் வெற்றிக்குப் பிறகு விராட் கோலி மற்றும் அணியினர் கொண்டாடும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோவில், ரோஹித் ஷர்மாவின் முகம் மிகவும் சோகமாக காணப்பட்டது. அதேசமயம் விராட் கோலி, சக வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை கட்டிப்பிடித்து, வெற்றி மகிழ்ச்சியில் கூச்சலிட்டுள்ளார். இதன் போது, விராட் கோலியும் இஷான் கிஷனை சந்திக்கிறார், மேலும் கிஷான் அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது