கோலிலாம் இல்லை அந்த இடத்திற்கு அவர் தான் சரியாக இருப்பார் – பயிற்சியாளர் ராகுல் டிராவிட்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உ
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. இந்திய அணி இந்த உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது.
நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதற்க்கு அடுத்த படியாக ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். விராட் கோலி 765 ரோஹித் ஷர்மா 597 ரன்களும் அடித்துள்ளனர். அவர்கள் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். 2022 உலகக்கோப்பைக்கு பின்னதாக ரோஹித் ஷர்மா t20 போட்டியில் விளையாடத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்தார்.
இந்த வருடம் ஜூன் மாதம் உலகக்கோப்பையானது தொடங்கவுள்ளது. அது குறித்து தான் தற்போது விவாதம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் உலகக்கோப்பையில் அவர் தான் கேப்டன்சி செய்வார் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடருக்கு அணியை அறிவித்துள்ளது.
இதில் தொடக்க வீரராக ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் ஒப்பனிங் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடக்க இடத்தில் இதற்க்கு முன்னதாக உலகக்கோப்பையில் ரோஹித் ஷர்மாவுடன் கில் தொடக்க வீரராக களமிறங்கினார். அவர் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும் அதன் பின் சிறப்பாக விளையாடி இருந்தார். அதே ஜெயஸ்வால் தொடக்க வீரராக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட T20 போட்டியில் ஜெய்ஸ்வால் தான் தொடக்க வீரராக இருக்க வேண்டும் என்று பலர் அவர்களது கருத்துகளை தெரிவித்து இருந்தார். ஆனால் அது எதுவும் இல்லாமல் தற்போது விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் அதை மறுத்துள்ளார். இடது கை வீரர் ஜெய்ஸ்வால் தான் ரோஹித் ஷர்மாவுடன் பேட்டிங் செய்வர் என்றும் அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் T20 போட்டியானது நாளை இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.