இந்த முறைக்குற வேலை எல்லாம் விராட் கோலிகிட்ட வெச்சிக்காதிங்க தம்பி. பர்கருக்கு ஆலோசனை கூறிய சுனில் கவாஸ்கர்.
இதை எல்லாம் வேற ஒருத்தர்கிட்ட வெச்சிகோங்க பர்கருகரை எச்சரித்த சுனில் கவாஸ்கர். இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் T20 மற்றும் ODI போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணிய டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அ
இதை எல்லாம் வேற ஒருத்தர்கிட்ட வெச்சிகோங்க பர்கருகரை எச்சரித்த சுனில் கவாஸ்கர். இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் T20 மற்றும் ODI போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணிய டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. இன்றைய போட்டி முந்தைய போட்டிக்கு முழுவதும் மாறுபட்டு இருந்தது.
அந்த போட்டியானது மூன்று நாட்களிலே முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் காரணமாக தோல்வியை தழுவியது. இருப்பினும் அதனை ஈடுகட்டும் வகையில் இன்று இந்திய அணி செயல்பட்டு இருந்தது. இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதில் முதல் நாளில் இன்று தொடக்கத்தில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் செஷன் முடிவடைவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தது.
தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய ஏடன் மார்க்கம் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற எல்கர் 4 ரன்கள் ஏறினார். தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை யாரும் சிறப்பாக விளையாடவில்லை என்று சொல்லலாம். எந்த ஒரு வீரரும் நிலைத்து நின்று விளையாடாமல் அந்த வேகத்திலேயே சென்று கொண்டிருந்தனர். அதன் பிற்கு பிறகு ஸ்டெப் மூன்று ரன்களிலும் ஜார்ஜ் இரண்டு ரங்களிலும் பெடிகம் 12 ரன்கள் இன்னும் ஜான்சன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
தென்னாப்பிரிக்கா அணியின் அதிகபட்சமாக வெர்ரின்னே 15 ரன்களையும் பெடிகம் 12 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். இதில் சிராஜ் ஒன்பது அவர்கள் வீசிய ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணியின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணியை அவர் சுருட்டி இருந்தார் அதன் பின் பும்ரா இரண்டு விக்கெட்களையும் முகேஷ் குமார் இரண்டு விக்கெட் களையும் வீழ்த்தி இருந்தனர். எனவே தென் ஆப்பிரிக்கா அணி முதல் செஷன் முடிவடைவதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து முன்னிலையில் உள்ளது.
அதன் பின் இந்திய அணியின் வீரர்கள் பேட்டிங் செய்து வந்தனர். இந்திய அணியின் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்த நிலையில் நான்காவதாக விராட் கோலி களமிறங்கினார். அப்போது பந்துவீச்சில் பர்கர் இருந்தார். அவர் பந்துவீசியவுடன் அவரை முறைத்து பார்த்து இருந்தார். அதற்க்கு பதிலுக்கு விராட் கோலியும் முறைத்து பார்த்து இருந்தார்.
Sunil Gavaskar said – "Virat Kohli is the wrong man to do your Aggression". pic.twitter.com/F14pxfflR6
— CricketMAN2 (@ImTanujSingh) January 3, 2024
அப்போது வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர் கூறுகையில் இது போன்று முறைத்து பார்ப்பது எல்லாம் விராட் கோலி இடம் வைத்து கொள்ளவேண்டாம். உங்களது ஆக்ரோஷத்தை எல்லாம் காட்டுவதற்கு இவர் சரியான நபர் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்திய அணி தற்போது 4 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை எடுத்து விளையாடி வருகின்றது.