கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த கோலி – குஜராத்திற்கு 197 ரன்கள் இலக்கு.

ஐபிஎல் 2023 க்கான 70வது மற்றும் ப்ளே ஆப்பிற்க்கான கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூருவில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதின. குஜராத் அணி எற்கனவே தகுதி பெற்று முதலிடத்தில் இருந்தது வருகிறது. பெங்களூரு அணிக்கு இந்த போட்டியில் வென்

By ·

ஐபிஎல் 2023 க்கான 70வது மற்றும் ப்ளே ஆப்பிற்க்கான கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூருவில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதின. குஜராத் அணி எற்கனவே தகுதி பெற்று முதலிடத்தில் இருந்தது வருகிறது. பெங்களூரு அணிக்கு இந்த போட்டியில் வென்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் தகுதி பெரும். இப்போட்டி மழையின் காரணமாக சற்று தாமதமாக போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கோலி மற்றும் டு பிளசிஸ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். டு பிளசிஸ் 28 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். மேக்ஸ்வெல் 11 ரன்களிலும் லோமரோர் 1 ரன்னில் அவுட் ஆகி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர்.

இருப்பினும் மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த கோலி 35 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதிரடியாக விளையாடி வந்த ப்ரேஸ்வேல் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அதன் பின் வந்த தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் பெங்களூரு அணி ரன்களை குவிக்க திணறி வந்தனர்.

ஆனாலும் மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தார் விராட் கோலி. 60 பந்துகளிலே தனது அடுத்தடுத்து சதத்தை பூர்த்தி செய்தார் கிங் கோலி. கோலியுடன் இணைந்த ராவத் ரன்களை குவித்து வந்தார் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தனர்

இந்நிலையில் இந்த போட்டியில் மட்டும் ஆர்சிபி வெற்றிபெற்றது என்றால் கண்டிப்பாக பிளே ஆஃபிற்குள் மும்பையை பின்னுக்கு தள்ளி நுழையும். அதே நேரத்தில் அப்படி வெற்றி பெரும் பட்சத்தில் ஆர்சிபி vs லக்னோ அணிகள் எலிமினேட்டர் தொடரில் போட்டியிடும். அந்த போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்பது மாற்றுக்கருத்தே கிடையாது. இருந்தாலும் என்ன நாடகம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை