கிரிக்கெட் விளையாடி இவற்றை தான் கற்றுக்கொண்டேன் – விராட் கோலி ஓபன் டாக்

உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சில

By ·

உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.

கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 48 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி இன்னமும் 1 சதம் அடித்தார் என்றால் சச்சின் சாதனையை சமன் செய்து விடுவார். மேலும் அது இந்த உலக கோப்பை போட்டியில் நடக்கும் என்று பலரும் கணித்திருக்கின்றனர்.

மேலும் இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிவரும் விராட் கோலி இந்திய அணிக்கு முதல் போட்டியிலேயே நம்பிக்கை கொடுத்து வெற்றி பெற செய்தார். அதற்கு பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிராக 95 ரன்கள் மிகவும் முக்கியமாக இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விராட் கோலி தன்னுடைய கிரிக்கெட் வாழ்கை குறித்து பேசியிருந்தார்.

அவர் கூறுகையில் “எனது ஒரே கவனம் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும், கடினமான சூழ்நிலைகளில் இருந்து அணிக்காக கேம்களை வெல்ல வேண்டும் என்பதே. அதற்காக நான் ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பாக சில மாற்றங்களைச் செய்தேன். எனக்குள் எப்போதும் உந்துதல் இருந்தது, ஆனால் எனக்கு நிபுணத்துவம் இல்லை.

இப்போது நான் விளையாட்டை எப்படி விளையாட விரும்புகிறேன் என்பதில் ஒரு ஒற்றை எண்ணத்துடன் கவனம் செலுத்துகிறேன். இவையெல்லாம் நான் கிரிக்கெட் வாழ்க்கைக்காக நான் கொடுத்த அர்பணிப்புக்காக கிடைத்தது.

உண்மையைச் சொன்னால், என் தொழிலில் இருந்து நான் கற்றுக்கொண்டது இதுதான். நான் மைதானத்தில் எனது நூறு சதவீதத்தை கொடுத்து கிரிக்கெட் விளையாடினேன், அதிலிருந்து எனக்கு கிடைத்த ஆசீர்வாதங்கள் கடவுளால் எனக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த அளவுக்கு விஷயங்கள் வெளிப்படும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை என்று கூறினார் விராட் கோலி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை