அவர்களை வெல்ல ஒரு வழி தான்.. நியூசிலாந்து பல தவறுகளை செய்யும் அணி இல்லை – விராட் பேட்டி.

தற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடர்ந்து இந்திய அணி தொடக்கம் முதலே வலுவான அணியாக இருந்து வருகிறது. ஆனால் அனைத்தும் சரியாக சென்றுகொண்டிருக்கும் போதுதான் இந்திய அணியின் துணை கேப்டனும்,ஆல்ரவுண்டருமாகிய ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இது சிறிய காயமாக இருக்கும் என்று

By ·

தற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடர்ந்து இந்திய அணி தொடக்கம் முதலே வலுவான அணியாக இருந்து வருகிறது. ஆனால் அனைத்தும் சரியாக சென்றுகொண்டிருக்கும் போதுதான் இந்திய அணியின் துணை கேப்டனும்,ஆல்ரவுண்டருமாகிய ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இது சிறிய காயமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மருத்துவர்கள் ஹர்திக் பாண்டியாவை சில நாட்கள் ஓய்வெடுக்க கூறியுள்ளனர்.

இதனால் இன்று தர்மசாலா மைதானத்தில் நடக்க இருக்கும் இந்தியா vs நியூசிலாந்து போட்டியில் ஹர்திக் பாண்டியா கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. மறுபுறம் நியூசிலாந்து அணி இந்த உலக கோப்பை தொடரில் மிகவும் வலுவான அணியாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் ஆடிய 4 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

மேலும் அவர்களின் அணியின் தற்போது கட்சிதமாக இருக்கிறது என்பதினால் இன்று நடக்கும் போட்டி மிகவும் கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே வேலையில் விராட் கோலி நியூஸிலாந்திற்கு எதிராக சில சிறப்பான நாக்குகளை ஆடியுள்ளதால் அவரை விரைவாக வீழ்த்த நியூசிலாந்து திட்டம் வைக்கும். இந்த நிலையில் தான் இந்திய அணியின் வீரர் விராட் கோலி நியூசிலாந்தை வெல்லும் வழி குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “அவர்கள் மிகவும் தொழில்முறை அணி மற்றும் மிகவும் கட்டமைக்கப்பட்ட அணி, அவர்கள் தங்கள் கிரிக்கெட்டை விளையாடுவதற்கு மிகவும் கட்டமைக்கப்பட்ட வழியைக் கொண்டுள்ளனர். ஆனால் அந்த கட்டமைப்பிற்குள், அவர்கள் மிகவும் சீரானவர்களாக விளையாடுகின்றன.ர் அதுவே அவர்களின் வெற்றிக்கு காரணமாக உள்ளது. இதற்கான பெருமை அவர்களின் அணிக்கே சாரும்.

அவர்கள் விளையாடும் விதம், அவர்களுக்கு எதிராக விளையாடும் எந்த அணியும் தங்கள் ரிதத்தை உடைத்து தங்கள் திறமைக்கு ஏற்றவாறு விளையாடுவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் இது அவர்களின் நிலைத்தன்மையை நீங்கள் சமாளிக்க முடியுமா இல்லையா என்பதை பற்றி முடிவு செய்யும்.

ஏனெனெனில் நியூசிலாந்து அணி பல தவறுகளை செய்யும் அணி கிடையாது. அதுதான் அவர்களின் பலமே. சர்வதேச அளவில், பல தவறுகளைச் செய்யாமல் இருந்தால், விளையாட்டில் அடிக்கடி வெற்றி பெற உங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார் கோலி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை