இங்க வந்து கிரிக்கெட் ஆடுவோம்னு எதிர்பாக்கல.. இது வெறும் தொடக்கம் தான் – விராட் கோலி.
இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் நாம் நெருங்கிவிட்ட நிலையில் இதற்கு பிறகு இந்தியா உலக கோப்பை டி 20 தொடரில் பாங்காகுபெற இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக எந்த சர்வதேச கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையாவது வெல்லும் என்று ரசிகர்களும் ஒட்டும
இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் நாம் நெருங்கிவிட்ட நிலையில் இதற்கு பிறகு இந்தியா உலக கோப்பை டி 20 தொடரில் பாங்காகுபெற இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக எந்த சர்வதேச கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையாவது வெல்லும் என்று ரசிகர்களும் ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய அணி கோப்பையை தகுவதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறது.
மேலும் இந்த உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துவே போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மூத்த வீரர்கள் இன்னமும் அணியில் இருந்து வருகின்றனர். மேலும் ஹர்திக் பாண்டியதான் இந்த உலக கோப்பை தொடரில் இந்தியாவை வழிநடத்துவார் என்றிருந்த நிலையில் அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவே கேப்டனாக இருக்கிறார்.
மேலும் இந்த வருடம் உலக கோப்பை போட்டியானது அமெரிக்காவில் நடைபெற இருப்பதினால் கிரிக்கெட் விளையாட்டு அங்கேயும் பிரலபமாக தொடங்கும். இதனால் கிரிக்கெட் மீதான ஆர்வமும் அதிகரிக்கும் என்பதினால் கண்டிப்பாக இந்தியாவும் கிரிக்கெட்டில் தாங்கள் சிறந்த அணி என்பதை நிரூபிக்க கண்டிப்பாக கடினமாக உழைக்கும் என்பதில் சந்தேகம். இந்நிலையில் தான் அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடுவது குறித்து பேசியுள்ளார் விராட் கோலி.
அவர் கூறியதாவது : உண்மையில் நாங்கள் அமெரிக்காப்பில் எந்த வடிவத்திலும் கிரிக்கெட் விளையாடுவோம் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இப்போது அது நிஜமாகியுள்ளது. இது உலகிலும் அமெரிக்காவிலும் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ந்து வரும் தாக்கத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறது. மேலும் உலகமும் மாற்றத்தை ஏற்கத் தயாராக உள்ளது. இது ஒரு சிறந்த தொடக்கம்.
எனவே இது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வகையான டோமினோ விளைவைத் தொடங்கும் என்று நான் நினைக்கிறேன், மேலும் இது நீண்ட காலத்திற்கு தொடரும் என்று நம்புகிறேன். அமெரிக்காவில் விளையாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், கிரிக்கெட் விளையாடுவது மற்றும் கிரிக்கெட்டைப் பார்ப்பது போன்ற உணர்வுகளைப் பற்றி மற்றவர்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எங்களுக்கு போதுமான மக்கள் உள்ளனர் என்றார் விராட் கோலி.