முதல் போட்டியில் இருந்து வெளியேறிய விராட் கோலி. அதற்க்கான காரணம் இது தானா??

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார் அதற்க்கான காரணங்களும் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை.

By ·

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார் அதற்க்கான காரணங்களும் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. இந்திய அணி இந்த உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது. நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதற்க்கு அடுத்த படியாக ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். விராட் கோலி 765 ரோஹித் ஷர்மா 597 ரன்களும் அடித்துள்ளனர். அவர்கள் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர்.

2022 உலகக்கோப்பைக்கு பின்னதாக ரோஹித் ஷர்மா t20 போட்டியில் விளையாடத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்தார். இந்த வருடம் ஜூன் மாதம் உலகக்கோப்பையானது தொடங்கவுள்ளது. அது குறித்து தான் தற்போது விவாதம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் உலகக்கோப்பையில் அவர் தான் கேப்டன்சி செய்வார் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடருக்கு அணியை அறிவித்துள்ளது. அதில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட்கோலியும் அணியில் இடம் பெற்று உள்ளனர். ஆனால் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் t20 போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளார் என்று நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அதற்க்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தனது குழந்தையின் 3வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காகவே விராட் கோலி, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இருந்து விலகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் விராட் கோலி அவரின் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று இரவு 7 மணிக்கு முதல் போட்டியானது நடைபெற உள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை