DRS ரிவியூவின் போது மேக்ஸ்வெலுடன் ராக், பேப்பர், சீசர் விளையாடிய கோலி – வீடியோ உள்ளே.

நேற்று ஏப்ரல் 20 ஆம் தேதி பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கோலி சிறப்பாக பேட்டிங் செய்தார். ஆனால் அவரது பேட்டிங் பற

By ·

நேற்று ஏப்ரல் 20 ஆம் தேதி பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கோலி சிறப்பாக பேட்டிங் செய்தார். ஆனால் அவரது பேட்டிங் பற்றி பேசாமல் மேக்ஸ்வெல்லுக்கும் விராட்கோலிக்கும் இடையே நடந்த சிறுவயது விளையாட்டு பற்றிய வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் பலவிதமான சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச முடிவு செய்தது. ஆனால் அது தவறான முடிவு என்று பிறகுதான் அவர்ளுக்கு தெரிந்தது. இந்நிலையில் அதிரடியாக ஆடிய விட்டார் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. கோஹ்லி மற்றும் ஃபாஃப் இருவரும் சிறப்பான அரைசதம் அடித்தனர்.

இந்நிலையில் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.2 ஓவரில் மொத்த விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களுக்கு சுருண்டது. முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா இருவரும் போராடி வெற்றி பெற முடியாமல் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். அப்படி ஒரு நிலையில் தான் மைதானத்தில் சுவாரசியமான ஒரு நிகழ்வு நடந்தது.

இந்த நிகழ்வு பஞ்சாப் பேட்ஸ்மேன் ஜிதேஷ் ஷர்மா, ஹர்ஷல் படேலின் பந்தில் ஷாட் ஆட முயற்சிக்கும் போது LPW முறையில் அவரது பேடில் பட்டது. ஆனால் நடுவர்கள் நாட் அவுட் என்று அறிவித்தனர் இதனால் ஆர்சிபி டிஆர்எஸ் எடுத்தது. இதற்கிடையில், நடுவர்கள் தங்கள் முடிவை வழங்க டிஆர்எஸ் சரிபார்த்து கொண்டிருக்கும்போது ​​அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி மற்றும் RCB இன் நட்சத்திர ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லுடன் ராக்,பேப்பர்,சீஸர் விளையாடுவது கேமராவில் சிக்கியது.

அந்த வீடியோ தான் தற்போது விராட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பொதுவாகவே விராட் கோலி மைதானத்தில் நடந்து கொள்வது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாகும். அவர் செய்யும் ஒவொவொரு செயல் பற்றியும் அதிகமாக சோசியல் மீடியாவில் பேசப்படும். அந்த வகையில் தான் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரையில் ஆர்சிபி 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்து 6வது இடத்தில் இருக்கிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை