அப்போது ஜெய்ஸ்வால் இப்போது சுப்மன் கில், இளம் வீரர்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் கோலி.
ஐபிஎல் 2023 இன் 62வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், குஜராத்தைச் சேர்ந்த இளம் தொடக்க வீரர் ஷுப்மான் கில் அதிரடியாக பேட்டிங் செய்தார். அபாரமாக சதம் அடித்தார். இந்த போட்டியில
ஐபிஎல் 2023 இன் 62வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், குஜராத்தைச் சேர்ந்த இளம் தொடக்க வீரர் ஷுப்மான் கில் அதிரடியாக பேட்டிங் செய்தார். அபாரமாக சதம் அடித்தார். இந்த போட்டியில் கேப்டன் முதலில் டாஸ் வென்ற எய்டன் மார்க்ரம் பந்துவீச முடிவு செய்தார்.
இந்நிலையில் டாஸை இழந்து முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அபார சதம் அடித்தார். சாஹா ஆட்டமிழந்த பிறகு, சாய் சுதர்சனுடன் இணைந்து கில் இன்னிங்ஸைக் கையாண்டு அதிககாம சதம் அடித்தார்.அவர் 58 பந்துகளில் 1 சிக்ஸர்-13 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தார். ஐபிஎல்லில் சுப்மான் கில் அடித்த முதல் சதம் இது என்று என்பது குறிப்பிடதக்கது.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் உட்பட அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பாராட்டுகளையும் பெற்றுள்ளார் சுப்மான் கில்.இந்த போட்டியில், ஷுப்மான் கில் தவிர, சாய் சுதர்சனும் சிறப்பாக பேட்டிங் செய்தார் இந்நிலையில் முதல் சதத்தை பதிவு செய்த சுப்மன் கில்லிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி பெரும் நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஆர்சிபியின் கேப்டனுமாகிய விராட் கோலி சுப்மன் கில்லிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விராட் கோலி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிடு அதில் சுப்மன் கில் சதம் அடிக்கும் புகைப்படத்திற் பகிர்ந்து “கில்லிடம் திறமை அதிகம். நீங்கள் சுதந்திரமாக விளையாடி எதிர்காலத்தில் நல்ல தலைவராக மாறுவீர்கள். கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கட்டும்” என்று சுப்மன் கில் பதிவிட்டிருக்கிறார்.
இதற்கு முன்னர் கூட யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடிக்கும் போது அவரை பாராட்டி விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு வைரலான நிலையில் தான் தற்போது சுப்மன் கில் அடித்த முதல் ஐபிஎல் சதத்தை பாராட்டி இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார் விராட் கோலி.
அந்த போட்டியை பொறுத்தவரையில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியினர் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தனர். அதற்கு பிறகு பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியால் குஜராத் அணியின் பந்துவீச்சை தாங்க முடியாமல் விக்கெட்டுகளை தொடக்கம் முதலே விட்டு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.