“ஜடேஜாவிடம் இருந்து அதை திருடிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க”. கலகலப்பாக பேசிய விராட் கோலி.

ஜடேஜாவிடம் இருந்து ஆட்டநாயகன் விருதை திருடிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. கலகலப்பாக பேசிய விராட் கோலி. உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின்

By ·

ஜடேஜாவிடம் இருந்து ஆட்டநாயகன் விருதை திருடிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. கலகலப்பாக பேசிய விராட் கோலி. உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வென்ற இந்திய அணியானது இன்று பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியானது பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. ஆனால் இந்த போட்டியில் கேப்டன் சகீப் அல் ஹாசன் இல்லை. மேலும் கடந்த சில போட்டிளில் பங்களாதேஷ் அணியானது கொஞ்சம் தடுமாறி வருகிறது. சொல்லப்போனால் முதல் போட்டியை தவிர பங்களாதேஷ் அணியானது 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்த போட்டியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் பங்களாதேஷ் அணி இருக்கிறது.

இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். பங்களாதேஷ் அதிகபட்சமாக ரிட்டன் தாஸ் 66 ரன்களும், ஹாசன் 51 ரன்களும், மஹ்மத்துல்லா 46 ரன்களும் எடுத்தனர் இறுதியில் பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பில் பும்ரா, சிராஜ், ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்களையும் தாகூர்,குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளையும் விழித்தனர்.

இந்த ஸ்கோர் இந்தியா அணிக்கு சற்று சவாலான ஸ்கோராக தான் இருக்கின்றது.257 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தை கொடுத்து 4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை குவித்துள்ளது. இறுதியில் இந்திய விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் அதிக பட்சமாக கோலி 103 ரன்களும்,கில் 53 ரன்களும், ரோஹித் ஷர்மா 48 ரன்களும் குவித்தனர்.

ஆரம்பத்தில் இருந்து பங்களாதேஷ் அணி விக்கெட்டுகளை எடுக்க தடுமாறியே வந்தது. பங்களாதேஷ் அணி சார்பில் மிராஸ் 2 விக்கெட்டுகளையும் ஹசன் மஹ்மூத் 1 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

விராட் கோலி கூறியது

அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது ஜட்டுவிடமிருந்து திருடியதற்கு மன்னிக்கவும். நான் ஒரு பெரிய பங்களிப்பை செய்ய விரும்பினேன். உலகக் கோப்பைகளில் அரைசதம் அடித்துள்ளேன், இந்த முறை அதை முடிக்க விரும்பினேன். நான் ஷுப்மானிடம் சொன்னேன், இந்த சூழ்நிலையைப் பற்றி நீங்கள் கனவு கண்டாலும், நீங்கள் மீண்டும் தூங்குங்கள். இது ஒரு கனவு ஆரம்பம். அது உங்களை அமைதிப்படுத்தும். ஆடுகளம் நன்றாக இருந்தது, எனது ஆட்டத்தை விளையாட அனுமதித்தது – இடைவெளிகளைத் தாக்கி, என்னால் முடிந்த போதெல்லாம் பவுண்டரிகளை கண்டறியவும் மேலும் டிரசிங் அறையில் சிறந்த சூழ்நிலை. இத்தகைய கூட்டத்தின் முன் விளையாடுவது சிறப்பு உணர்வு.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை