அரை சதத்தை பூர்த்தி செய்த கையோடு ஆட்டமிழந்து வெளியேறினார் விராட் கோலி. தடுமாற்றத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. இன்றைய உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் தற்போது நரேந்திர மோடி

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. இன்றைய உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் தற்போது நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடி வருகின்றது. இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக இன்று ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி வருகின்றது.

ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவி இருந்தாலும் அதன் பின் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பதித்து இன்று இந்திய அணியை எதிர்த்து விளையாடி வருகின்றது. இன்றைய இறுதிபோட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பாக இந்தியாவின் விமான வீரர்கள் விமானத்தை வைத்து வானில் கண்காட்சிகளை மைதானத்திற்கு மேல் நடத்தினர். அதன் பிறகு டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பௌலிங் செய்வதாக தேர்வு செய்தார். அது அவர்களுக்கு சொல்லி கொள்ளும் வகையில் சிறப்பாகவே அமைந்தது.

இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மான் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் போட்டியின் ஆரம்பத்திலேயே அவர்களது விக்கெட்டை இழந்து வெளியேறினார். சுப்மான் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் நான்கு ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் வந்து வெளியேறினார்கள். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆரம்பத்தில் சுப்மான் கில் தந்து விக்கெட்டை இழந்து வெளியேறி இருந்தாலும் அவர் அவருடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அவர் 31 பந்துகளில் 4பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சருடன் 47 ரன்கள் இருந்த நிலையில் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஷ்ரேயஸ் ஐயர் ஸ்பின் பந்துவீச்சாளர்களை சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்திய அணிக்கு 4 ரன்னில் வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். அதே போல் தான் சுப்மான் கில்லுக்கு அகமதாபாத் மைதானம் அவருடைய நெருக்கமான மைதானம் மற்றும் இந்திய அவர் ஐபிஎல் போட்டிகளில் அந்த மைதானத்தில்

விளையாடி இருக்கின்றார் என பலர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் ஆட்டமிழந்து வெளியேறினார். யார் ஆட்டமிழந்து வெளியேறினாலும் விராட் கோலி சிறப்பாக அணிக்கு ரன்களை குவித்து வருகிறார். அவர் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்த நிலையில் விராட் கோலி 54 ரன்னில் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். கே.எல்.ராகுல் 39 ரன்களிலும் ஜடேஜா 1 ரன்னிலும் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை அடித்து விளையாடி வருகின்றது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை