விராட் கோலி விக்கெட்டால் இந்திய அணிக்கு இருந்த நம்பிக்கையும் போனது. வெற்றி பெருமா இந்திய அணி?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அதாவது ஜூன் 9ஆம் தேதி இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில், மூன்றாவது நாளில் திரும்பிய இந்தி

By ·

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அதாவது ஜூன் 9ஆம் தேதி இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில், மூன்றாவது நாளில் திரும்பிய இந்திய அணி, மூன்றாவது நாள் அனைத்து விக்கெட்டுகளையும், இழந்து 296 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதாவது 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. இன்றைய நாள் இந்திய அணிக்கு ஆரம்பத்தில் சிறப்பாகவே அமைந்தது.

இந்திய அணியில் இருந்து மூன்றாவது நாளில், அஜிங்க்யா ரஹானே சிறப்பாக பேட்டிங் செய்து 89 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைத்து அற்புதமாக விளையாடி வந்த ஷர்துல் தாக்கூர் அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பிறகு நான்காம் நாளில் போட்டியை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை 270 ரன்களை குவித்த நிலையில் டிக்ளர் செய்தது. தற்போது ஆஸ்திரேலியாஅணி 443 ரன்கள் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்திய அணி 444 ரன்களை எடுத்தால் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி விடும்.

ஆஸ்திரேலிய அணியின் அதிக பட்ச ஸ்கோராக அலக்ஸ் கேரி 66 ரன்களும், ஸ்ட்ராக் 41 ரன்களும், லாபுசேன் 41 ரன்களையும் எடுத்து ஆஸ்திரேலியாஅணிக்கி நம்பிக்கை தரும் வகையில் விளையாடினர். இந்த போட்டியை பொறுத்த வரை இந்திய அணியின் பவுலர்கள் சற்று சிறப்பாக பந்துவீசினார்கள். தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் ஜடேஜா 3 விக்கெடுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்து இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.

இந்திய அணி 444 ரன்களை எடுத்தால் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் நம்பிக்கையுடன் போட்டியை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் நிதனமான தொடக்கமே கிடைத்தது. 18 ரன்களில் ஷுப்மன் கில் தனது விக்கெட்டை இழந்தார் அந்த கேட்சானது மிகவும் சர்ச்சைகுள்ளாகியது. அதன் பிறகு ரோஹித் ஷர்மா 43 ரன்களிலும், புஜாரா 27 ரன்னிலும், அவுட்டாகி வெளியேற இந்திய அணிக்கு மொத்தமாக இருந்த நம்பிக்கை எல்லாம் விராட் கோலி மேல் சென்றது. விராட் கோலியால் மட்டுமே தான் அணியை வெற்றி பெற வைக்க முடியும் என எதிர்பார்த்து இருந்தனர்.

அனைவருக்கும் ஏமாற்றத்தையே அளித்தார். அதாவது 49 ரன்கள் இருத்த நிலையில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறது இந்திய அணிக்கு இருந்த நம்பிக்கை அனைத்தும் சென்று விட்டது. ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். தற்போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணிக்கு இன்னும் 243 ரன்கள் இலக்காக உள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை