மகத்தான சாதனை படைக்க விராட் கோலிக்கு இன்னும் 102 ரன்கள் மட்டுமே தேவை – அது என்ன சாதனை தெரியுமா?
உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சில
உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.
கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். கடந்த வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் கூட தன்னுடைய 500வது சர்வதேச போட்டியை விளையாடி 500வது போட்டியில் 76வது சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் விராட் கோலியின் உற்ற நண்பராக இருந்தவர் ரவி சாஸ்திரி.
மேலும் இருவரும் இந்தியா அணிக்காக ஒன்றாக பணியாற்றி இருந்தார்கள். ஆனால் ஒரு முறை கூட ஐசிசி போட்டிகளில் கோப்பையை வெல்ல முடியாத நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியும், பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரியும் விலகினார்கள். இவர்களை அடுத்து ரோஹித் கேப்டனாகவும் ராகுல் ட்ராவிட் பயிற்சியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர்களாலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் கூட மோசமான தோல்வியை இந்தியா தழுவியது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா மழை காரணமாக 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்தாக இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. மேலும் இந்த போட்டியில் விராட் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மகத்தான ஒரு சாதனை படைக்க இன்னமும் 102 ரன்கள் மட்டுமே தேவை.
அதாவது விராட் தற்போது ஒருநாள் போட்டியில் 12,898 ரன்களை எடுத்துள்ளார். எனவே வரும் ஒருநாள் போட்டியில் விராட் முதல் போட்டியிலேயே சதம் அடிக்கும் பட்சத்தில் குறைவாக இன்னிங்கில் சர்வதேச ஒருநாள் போட்டியில் 13,000 ரன்களை எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைப்பார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்ட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் 5வது இடத்தில் இருக்கிறார்.
இதனால் வரும் காலங்களில் இந்திய அணியானது ஒருநாள் போட்டிகள் அதிகம் விளையாடுவதினால் ஜெயசூர்யா மற்றும் பாண்டிங் சாதனைகளை முறியடித்து 3வது இடத்திற்கு செல்வார் என்று எதிர்பாரப்படுகிறது. மேலும் அப்படி செய்யும் பட்சத்தில் மிகவும் குறைவான போட்டியில் அந்த ரன்களை எட்டியாவர் என்ற சாதனைகளையும் படைப்பார் விராட் கோலி.