ஜோ ரூட் விளையாடும் அந்த ஷாட்டை விளையாட எனக்கு ஆசை – கோலி வெளியிட்ட ஆச்சரிய தகவல்.
உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சில
உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 78 சத்தங்களை அடித்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் அடித்த 49 சதங்களை சமன் செய்ய அவருக்கு இன்னமும் 1 சதம் மட்டுமே தேவை. இந்நிலையில் தற்போது நடந்து வரும் உலக கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும் விராட் கோலி இந்தியா vs இங்கிலாந்து போட்டிக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார்.
அதில் பேசுகையில் “நான் முன்பு மார்க் வுட்டை எதிர்கொண்டேன். அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்று நான் நம்புகிறேன். உண்மையான அவருடைய வேகத்திற்கு எதிராக என்னை நானே சவால் செய்ய விரும்புகிறேன் அடில் ரஷீத் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக செயல்படும் அதே நேரத்தில் மற்றவர்களினால் குறைந்த மதிப்பிடப்பட்ட பந்து வீச்சாளர். அவர் ஒரு சவாலான பந்துவீச்சாளர், அவருக்கு எதிராக விளையாடுவதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றார் விராட்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரும் முன்னாள் கேப்டனுமாகிய ஜோ ரூட் குறித்தும் பேசினார். அவர் கூறியதாவது “ஜோ ரூட் ஒரு அற்புதமான ஆல்ரவுண்டர். அவர் அடிக்கும் ரிவர்ஸ் ஸ்லாப் ஷாட்டை சரியாக விளையாடும் விதத்தை நான் பாராட்டுகிறேன், அந்த ஷாட்டை என்றாவது ஒருநாள் எனது ஆட்டத்தில் விளையாட விரும்புகிறேன் என்றார் விராட் கோலி.
இந்நிலையில் இன்று நடந்து வரும் இந்தியா vs இங்கிலாந்து போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா வழக்கம் போல அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் தடுமாறிய சுப்மன் கில் 9 (13) ரன்களில் கிறிஸ் ஓக்ஸ் வேகத்தில் கிளீன் போல்டானார்.
இந்த மாதிரியான சூழ்நிலையில் எப்போதும் இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் விராட் கோலி நங்கூரமாக விளையாடுவதற்காக நிதானத்தை காட்டிய போதிலும் 9 பந்துகளை எதிர்கொண்டு டேவிட் வில்லி வேகத்தில் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவும் இந்தியாவுக்கு பின்னடைவாகவும் அமைந்தது. உலக கோப்பை தொடரில் கடந்த 2011 முதல் விளையாடி வரும் அவர் டக் அவுட்டாவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.