வீடியோ : சண்டை என்றால் எனக்கு மிகவும் பயம் – ஓப்பனாக பேசிய விராட் கோலி.

இந்தியாவில் கிங் ஆஃப் கிரிக்கெட் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விராட் கோலி. இவருக்கு ரன் மெஷின் என்று வேறு பெயரும் உள்ளது. கடந்த கால வீரர்கள் செய்த பல சாதனைகளை விராட் தற்போது முறியடித்து கொண்டு வருகிறார். ஐபிஎல் சீசனிலும் பல சாதனைகளை செய்துள்ளார் விராட். ஐசிசி அண்டர் 19 உலகப்

By ·

இந்தியாவில் கிங் ஆஃப் கிரிக்கெட் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விராட் கோலி. இவருக்கு ரன் மெஷின் என்று வேறு பெயரும் உள்ளது. கடந்த கால வீரர்கள் செய்த பல சாதனைகளை விராட் தற்போது முறியடித்து கொண்டு வருகிறார். ஐபிஎல் சீசனிலும் பல சாதனைகளை செய்துள்ளார் விராட். ஐசிசி அண்டர் 19 உலகப்கோப்பை 2008 தொடரில் கேப்டனாக இருந்து கடந்த 15 வருடங்களாக ஒருநாள் போட்டி, டி 20, டெஸ்ட், ஐபிஎல் என பல போட்டிகளில் விளையாடி வருகிறார்.

அதோடு பல சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு 25000க்கும் மேல் ரங்களையும் 75 சதங்களையும் அடித்துள்ளார் விராட் கோலி. அதே போன்று ஐபிஎல் தொடர்களிலும் அதிக ரன் அடித்தோர் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார் விராட் கோலி. மேலும் இவருடைய கேப்டன்சியில் உலகக்கோப்பையை வென்று கொடுக்காவிட்டாலும், பல சரித்திர சாதனைகளை படித்திருக்கிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடரை வென்று சாதனை படித்தார்.

இப்படி விராட் என்றாலே ரன் மெஷின், சிறந்த பேட்டிங், அபாரமான பீல்டிங், வீரர்களை ஊக்குவிப்பது என இருக்கும் இவர் மற்றொரு வகையிலும் ரசிகர்களுக்கு பரிகாயமானவர். அதவாது இவர் பல கிரிக்கெட் போட்டிகளில் அதிக கோபத்தையும் ஆக்கிரோஷத்தையும் வெளிப்படுத்த கூடியவர் விராட். குறிப்பாக பதிலடி கொடுப்பதில் இவரை மிஞ்ச யாரும் என்றும், சண்டைகளுக்கு அஞ்சாதவர் என்று ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் விராட் அவற்றை உடைக்கும் வண்ணம் சமீபத்தில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார்.

விராட் கோலி சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு பேட்டி ஓன்று கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் விராட் கூறுகையில் ” நான் எப்போதுமே உடல் ரிதியான சண்டையில் ஈடுபடமாட்டேன். யாராவது என்னை அடித்தால் நான் அவ்வளவு தான் எனக்கு என்ன நடந்தது என்று கூட அவர்களுக்கு தெரியாது. காலத்தில் வாய்ந்த வார்த்தையாக மட்டுமே பேசுவேனே தவிர உடல்ரீதியான சண்டையில் ஈடுபடமாட்டேன் என்றால் விராட்.

மேலும் பேசிய அவர் “களத்தில் நான் பேசும் சில வார்த்தையில் அப்போதைய சூழ்நிலைக்கு பேசவேண்டியதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் ஆட்டத்தின் போது களத்தில் சண்டை போட்டால் நடுவர்கள் வந்து தடுப்பார்கள் என்று அனைவருக்கும் தெரியும் என்று கூறினார் விராட் கோலி. இவர் கூறியதை வைத்து பார்க்கும் போது களத்தில் ஆக்கிரோஷமாக காணப்படும் இவர் உண்மையில் சாதுவானவர் என்று தெரிகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை