நான் தேர்வாளராக இருந்தால் கண்டிப்பாக விராட் கோலியை T20 உலககோப்பைக்கு தேர்வு செய்வேன் – சுனில் கவாஸ்கர்.

ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். அவர் இந்த 2023 ஐபிஎல் தொடரில் 14 ஆட்டங்களில் 6 அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்களுடன் 639 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 53.25 சராசையுடன் 139.82 ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டு சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்

By ·

ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். அவர் இந்த 2023 ஐபிஎல் தொடரில் 14 ஆட்டங்களில் 6 அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்களுடன் 639 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 53.25 சராசையுடன் 139.82 ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டு சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் துரதிஷ்ட வசமாக இந்த வருட ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பிளே ஆஃப் வரமுடியாமல் தோல்வியை தழுவியது.

அப்படிப்பட்ட நிலையில் தான் சம்பரத்தில் கிடைத்த தகவல்களின் படி BCCI T20I களுக்கான அணியை மறுசீரமைப்பதற்கும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2024 T20 உலகக் கோப்பைக்கான புதிய அணியை உருவாக்குவதற்கும் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2024 டி20 அணிக்கான தேர்வுக்கு முன்னர் அடுத்த ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்திறனை கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முன்னாள் வீரர் கவாஸ்கர்.

ஏனென்றால் கடந்த 2022 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி ரோஹித் ஷர்மா கேப்டன்சியில் அரையிறுதியில் மிகவும் மோசமாக செயல்பட்டு தோல்வியை தழுவியது. இதனால் அடித்த டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இடம் பெற வாய்ப்பு குறைவு என்று வதந்திகள் பரவி வந்தன. அப்படிப்பட்ட நிலையில் தான் விராட் கோலி வரும் 2024 டி20 உலககோப்பையில் ஆடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

சுனில் கவாஸ்கர் கூறியது :

அவர் கூறுகையில் “அடுத்த டி20 உலகக்கோப்பை வரும் 2024ஆம் ஆண்டுதான் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னர் ஒரு ஐபிஎல் இந்தியாவில் நடக்கும். அந்த நேரத்தில் விராட் கோலியின் விளையாட்டு கண்காணிக்கப்படும். எனவே அந்த விஷியத்தை பற்றி தற்போது பேசி எந்த பலனும் இல்லை. வரும் டி20 சர்வதேச போட்டிகளை எடுத்துக்கொண்டால் அவை வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது.

அந்த அணியில் கண்டிப்பாக விராட் கோலி இருப்பார். அதற்க்கான உடல் தகுதியும், செயல்திறனும் அவரிடம் இருக்கிறது. ஆனால் வரும் 2024ஆம் ஆண்டில் நடக்கும் டி20 போட்டிகளை பொறுத்தவரையில் அவர் வெஸ்ட் இன்டியன்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. எனவே அதில் விளையாடும் வீரர்களை கண்டிப்பாக சரியாக தேர்வு செய்யவேண்டும். அதற்கு முன்னர் ஐபிஎல் வருகிறது அதில் வீரர்களின் செயல்திறனை பார்த்துவிட்டு உலகக்கோப்பை விளையாடும் வீரர்கள் பற்றி பேசப்படும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில் “விராட் நிச்சயமாக எனது T20 அணியில் இந்தியாவின் தற்போதைய வடிவத்தில் வரவிருக்கும் போட்டிகளில் இருப்பார். அவர் இரண்டு சதங்கள் ஐபிஎல் 2023ல் அடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் அடிப்பது அல்லது 50 ரன்கள் எடுப்பது கூட கடினம். நான் ஒரு வேளை இந்திய அணியின் தேர்வாளராக இருந்தால் எந்த சந்தேகமும் இன்று நான் விராட் கோலியை டி20 அணியில் சேர்ப்பேன் என்கிறார் கவாஸ்கர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை