பெங்களூரு அணியில் பாதி பேருக்கு ஆங்கிலம் கூட தெரியாது. அவர் இதை மாற்றியே ஆக வேண்டும் – சேவாக் அதிரடி

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 30வது போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூரில் உள்ள சின்ன சாமி மைதானத்த

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 30வது போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூரில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதியது. பெங்களூரு அணி இதற்கு முன்பு நடந்த போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டியும் அந்த வகை போட்டியில் ஒன்றாக மாறியது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்து புதிய சாதனை ஒன்றை படைத்தது. அதில் அபிஷேக் ஷர்மா நிதானமாக விளையாடி 33 ரன்னில் வெளியேறி இருந்தாலும் அதன் பின் அதிரடியை காட்டிய ஹெட் 41 பந்துகளில் 104 ரன்களை எடுத்து அவர் வெளியேற அதன் பின் க்ளாசென் 31 பந்துகளில் 67 ரன்களையும் அடித்து இருந்தார். சமத் 10 பந்துகளில் 30 ரன்களிலும் மார்க்ரம் 17 பந்துகளில் 32 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹைதராபாத் அணி மட்டும் 22 சிக்சர்களையும் 19 பவுண்டரிகளையும் அடித்து இருந்தது.

பெங்களூரு அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக கேப்டன் டு பிளசிசிஸ் 28 பந்துகளில் 62 ரன்களை அடித்து இருந்தார். கோலியும் 20 பந்துகளில் 42 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தார். அதன் பின் மிடில் ஆற்டர் வீர்கள் அனைவரும் சொதப்பி வரவே தினேஷ் கார்த்திக் தனது அதிரடி ஆட்டத்தை காட்டி பெங்களூரு அணியை கடைசிவரை கொண்டு சென்றார். 35 பந்துகளில் 84 ரன்களை அடித்து பெங்களூரு அணிக்கு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தாலும் மக்களின் மனதை தினேஷ் கார்த்திக் வென்றுவிட்டார்.

உங்களிடம் 12-15 இந்திய வீரர்கள் இருந்தால், வெறும் 10 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் உங்கள் பணியாளர்கள் முழுவதும் வெளிநாட்டினரால் உருவாக்கப்பட்டிருந்தால், அது ஒரு பிரச்சினை. அவர்களில் சிலர் மட்டுமே சர்வதேச வீரர்கள், மீதமுள்ளவர்கள் அனைவரும் இந்தியர்கள், அவர்களில் பாதி பேருக்கு ஆங்கிலம் கூட புரியாது. அவர்களை எப்படி ஊக்குவிப்பீர்கள்? அவர்களுடன் நேரத்தை செலவிடுவது யார்? அவர்களிடம் பேசுவது யார்? ஒரு இந்திய ஊழியரையும் என்னால் பார்க்க முடியவில்லை. குறைந்த பட்சம் ஆட்டக்காரர்கள் நம்பக்கூடிய ஒருவர் இருக்க வேண்டும்.”

வீரர்களுக்கு தற்போது கிடைக்காத ஆறுதல் நிலை தேவை. கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் ஏதாவது கேட்டால் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் வீரர்கள் முன்னால் வெறுமையாகச் செல்கிறார்கள். தலைவர் இந்தியராக இருந்தால், உங்கள் மனதில் தோன்றுவதைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் ஒரு வெளிநாட்டு வீரரிடம் அவ்வாறு செய்தால், அடுத்த ஆட்டத்தில் நீங்கள் விளையாடும் XI இல் இருந்து வெளியேறலாம். RCBக்கு குறைந்தது 2-3 இந்திய துணை ஊழியர்கள் தேவை,” என்று அவர் மேலும் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை