$100,000 பணத்தை விடுமுறையில் செலவழிப்பேன்.. ஏழை நாட்டுக்கெல்லாம் போக மாட்டோம் – சேவாக் சுவாரஸ்ய பேச்சு.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த தொடரானது கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது வீரர்களை கண்டுபிடிக்க உருவாக்க பட்டாலும் பொழுதுபோக்கிற்காகவும், வணிக ரீதியாக விளம்பரத்திற்காக இர

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த தொடரானது கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது வீரர்களை கண்டுபிடிக்க உருவாக்க பட்டாலும் பொழுதுபோக்கிற்காகவும், வணிக ரீதியாக விளம்பரத்திற்காக இருக்கும் ஒரு நிகழ்ச்சிய ஐபிஎல் தொடரானது மாறியுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு அதிகமான சம்பளமும் கொடுக்கப்படுகிறது.

இதனாலேயே வெளிநாட்டு வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். மேலும் மற்ற நாடுகளிலும் இது போன்ற தொடர் இருந்தாலும் ஐபிஎல் மட்டுமே அதிக அளவு ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இதனால் வீரர்களுக்கான சம்பளமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான் முன்னல் இந்திய அணியின் வீரர் தன்னை வெளிநாட்டில் நடக்கும் தொடருக்கு அழைத்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது : நாங்கள் எதற்கு போகவேண்டும். நாங்கள் பணக்காரர்கள், நாங்கள் ஏழை நாடுகளுக்குச் செல்வதில்லை. நான் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற போது. சொல்லப்போனால் ​ஓய்வு பெறவில்லை, ஆனால் ஐபிஎல் விளையாடிக்கொண்டிருந்தபோது, ​​பிக் பேஷில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு வந்தது என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நான் அவர்களிடம் நீங்கள் எவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டேன். அவர்கள் சுமார் $100,000 என்றார்கள்.

அதற்கு நான் கூறினேன் எனது விடுமுறை நாட்களில் இவ்வளவு பணத்தை என்னால் செலவழிக்க முடியும் என்று பதிலளித்தேன். பிக் பாஷ் அல்லது தி ஹன்ட்ரட் விளையாடி ஒரு மாதம் விளையாடினால் $100,000 மட்டுமே கிடைக்கும், ஒருவேளை $200,000 அல்லது மில்லியன் என்பது பற்றி பேசினால் பற்றி பேசினால் நான் விளையாட வருகிறேன், இல்லையென்றால் எனக்கு விருப்பமில்லை என்றார் சேவாக்.

மேலும் ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்த சேவாக் கூறுகையில் : ஸ்கை ஸ்போர்ட்ஸிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது, ‘உங்களை எங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம் என்றார்கள். நான் கூறினேன் ‘உங்களால் என்னை வாங்க முடியாது’ என்று. ஆனால் அவர்கள் என்னிடம் எவ்வளவு கொடுத்தால் வருவீர்கள் என்று கேட்டார்கள்.

நான் சொன்னேன் “உங்களால் கொடுக்க முடியாது என்று. ஆனால் அவர்கள் என்னிடம் தயவுசெய்து எவவ்ளவு கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். அதற்கு நான் “ஒரு நாளைக்கு 10,000 பவுண்டுகள் கொடுங்கள் என்று. அதற்கு அவர்கள் சொன்னார்கள் “ஆம் நீங்கள் சொல்வது சரிதான் எங்களால் உங்களை வாங்க முடியாது என்று என சுவாரசியமான நிகழ்வை நினைவு கூர்ந்தார் சேவாக்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை