ஐபிஎல் 2023 தொடரில் வீரேந்திர சேவாக் தேர்வு செய்த 5 பேட்ஸ்மேன்கள் – யார் யார் தெரியுமா?
ஐபிஎல் 2023 கடந்த 2 மாதங்களாக நடைபெற்று இன்று நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் அனைத்து அணிகளும் தங்களால் என்ன முடியும் என்பதை காட்டினார்கள். சில அணிகள் 140 ரன்களுக்கு மேலே அடிக்கவே திணறினார்கள். சிலர் 200 ரன்களாக இருந்தாலும் சுலபமாக அடித்து போட்டியில் வெற்றி பெற்றார்கள். மேலும்
ஐபிஎல் 2023 கடந்த 2 மாதங்களாக நடைபெற்று இன்று நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் அனைத்து அணிகளும் தங்களால் என்ன முடியும் என்பதை காட்டினார்கள். சில அணிகள் 140 ரன்களுக்கு மேலே அடிக்கவே திணறினார்கள். சிலர் 200 ரன்களாக இருந்தாலும் சுலபமாக அடித்து போட்டியில் வெற்றி பெற்றார்கள். மேலும் பல புதிய பேட்ஸ்மேன்களும் இந்த ஐபிஎல் தொடரில் தங்களின் அற்புதமான திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த சீசனில் சேஸ் மாஸ்டர் விராட் கோலி மற்றும் சுப்மான் கில் மூன்று சதங்களை அடித்துள்ளனர். சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், வெங்கடேஷ் ஐயர், ஹாரி புரூக், ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்து ஒருவரை ஒருவர் மிஞ்சினார்கள். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகிய புதிய வீரர்களாக ஒரே லீக் தொடரில் சதம் அடித்தது இதுவே முதல் முறை. இத்தகைய வலுவான ஆட்டங்களைத் தொடர்ந்து, வீரேந்திர சேவாக் போட்டியின் 3 பேட்டர்களைத் தேர்ந்தெடுத்தார்.
அவர் கூறுகையில் “நான் 5 வீரர்களை தேர்வு செய்துள்ளேன் , நன் அதிக தொடக்க வீரர்களை தேர்வு செய்யவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது. நான் தேர்வு செய்யலாம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ரிங்கு சிங் தான். ஏன் நான் அவரை தீவு செய்தேன் என்று உங்கெளுக்கே தெரியும் என்று நம்புகிறேன். ஏனென்றால் வரலாற்றில் நடக்காத ஒன்றி ரிங்கு அன்று நிகழ்த்தி காட்டினார்.
கடைசி ஒரு ஓவரில் 5 சிக்ஸர்களை தொடர்ந்து அடித்து விளாசினார். அதே போல இரண்டாவது பேட்ஸ்மேன் சிவம் துபே. அவர் இந்த சீசனில் 33 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதுவும் 160 ஸ்ட்ரைக் ரேட்டுடன். கடந்த சில சீசன்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்த சீசன் தெளிவான மன நிலையுடன் சிறப்பாக ஆடியிருக்கிறார்.
மூன்றாவதாக நான் தேர்வு செய்தது இந்த சீசனில் அற்புதமான தொடக்க வீரர் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால். அவரின் பேட்டிங் திறமை என்னை வலுக்கட்டாயமாக தேர்வு செய்ய வைத்தது. அதற்கடுத்து நான்காவதாக நான் சூரிய குமார் யாதவ் அவர்களை தேர்வு செய்வேன். இந்த ஐபிஎல் சீசனில் தொடக்கத்தில் அவர் சரியான பேட்டிங் திறமையை காட்டவில்லை. ஆனால் அதற்கடுத்து மும்பை அணிக்கு சிறப்பாக விளையாடினார்.
கடைசியாக நான் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்திருக்கலாம், ஆனால் நான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கிளாசனை தேர்வு செய்தேன். ஏனென்றால் அவர் இந்தியாவில் வெளிநாட்டு வீரர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும் விக்கெட்டில் சூழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுகிறார். அவரின் திறமை பிரமிக்க வைக்கிறது என்றார் வீரேந்திர சேவாக்.