இந்த மாதிரியான வீரரால் எந்த பயனும் இல்லை – பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேனை கடுமையாக விமரித்த சேவாக்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் பஞ்சாப் அணியும் குஜராத் அணியும் முல்லான்பூரில் உள்ள மைதானத்தில் நேற்று மோதியது. இந்த இரு அணிகளும் அவர்கள் விளையடிய கடைசி ப
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் பஞ்சாப் அணியும் குஜராத் அணியும் முல்லான்பூரில் உள்ள மைதானத்தில் நேற்று மோதியது. இந்த இரு அணிகளும் அவர்கள் விளையடிய கடைசி போட்டியில் தோல்வியை தழுவி இருந்தனர்.
இந்நிலையில் நேற்று போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக கலந்து கொள்ளாத நிலையில் சாம் கரண் கேப்டனாக பொறுப்பேற்று டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். வழக்கம் போல் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பி விட்டனர். அது மட்டும் இல்ல்லாமல் மிடில் ஆர்டரில் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வந்த ஷஷாங் சிங் மற்றும் அர்ஷ்தோஷ் ஷர்மா இவர்களாலும் ரன்களை குவிக்க முடியவில்லை.
இந்நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் இந்த ஐபிஎல் போட்டியை பொறுத்தவரையில் விளையாடிய 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்து சராசரியாக 19.18 வைத்துள்ளார். மேலும் பேட்டிங்கிலிலும் அவ்வளவு பெரிதாக எதுவும் செய்யவில்லை. சொல்லப்போனால் வெறும் 152 ரன்களுடன் சராசரி 19.00 வைத்துள்ளார். இந்நிலையில் தான் சாம் கரண் குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் வீரரான சேவாக்.
அவர் கூறுகையில் : நான் சாம் கரானை பேட்டிங் ஆல்-ரவுண்டராகவோ அல்லது பந்துவீச்சு ஆல்-ரவுண்டராகவோ வைத்திருக்க மாட்டேன். ஏனென்றால், கொஞ்சம் பேட்டிங் மற்றும் கொஞ்சம் போலிங் என்று யார் செய்தாலும் அப்படிப்பட்ட வீரரால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் உங்கள் பேட்டிங்கால் ஆட்டத்தை வெல்லவேண்டும் அல்லது பௌலிங்கால் ஆட்டத்தை வெல்ல வேண்டும். உங்கள் பந்துவீச்சினால் நீங்கள் அசாதாரணமாக ஆடவேண்டும் அல்லது மோசமாக தோல்வியை தழுவ வேண்டும் என்றார் சேவாக்.
பந்துவீச்சில் எங்களுடைய முயற்சி நம்பமுடியாதது, அர்ப்பணிப்பு மற்றும் சண்டை ஆச்சரியமாக இருந்தது, ஆனால் அது போதாது. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் மற்றும் சாய் கிஷோர் மிகவும் சிறப்பாக பந்துவீசினார். அந்த ஆடுகளத்தை நாங்கள் மூன்றாவது முறையாக பயன்படுத்துகிறோம். 160க்கு மேல் ஸ்கொர் சரியாக இருக்கும். இருந்த போதிலும் நாங்கள் நன்றாகப் போராடினோம் என்றார் சாம் கரண்