வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு டிராவிட்டிற்கு ஓய்வா? பயிற்சியாளராகும் முன்னாள் ஜம்பவான் – வெளியான தகவல்.
இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பலவகை போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி இதன் முதல் போட்டியாக 2 டெஸ்ட் போட்டிகள் நடக்க இருந்த நிலையில் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது அடுத்த போட்டியானது வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்க இருகிறது. இதன் மூலம் இந்திய அணியானது த
இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பலவகை போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி இதன் முதல் போட்டியாக 2 டெஸ்ட் போட்டிகள் நடக்க இருந்த நிலையில் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது அடுத்த போட்டியானது வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்க இருகிறது. இதன் மூலம் இந்திய அணியானது தற்போது 1-0 என்ற கனக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
அதனை தொடர்ந்து இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரானது முடிவடைந்த கையோடு இந்திய அணியானது அங்கிருந்து நேரடியாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த டி20 தொடரானது ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி துவங்கி 23-ஆம் தேதி வரை டப்ளின் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த போட்டிக்கு பிறகு இந்திய அணியானது ஆசிய போட்டிகளை விளையாட இருக்கிறது. மேலும் இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப் படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிப்பதோடு மட்டுமின்றி அணியின் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களுக்கும் ஓய்வு வழங்கப்பட உள்ளதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருககிறது. இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது தொடர் பனிச்சுமை மற்றும் உலக கோப்பை போட்டி.
குறிப்பிடத்தக்க வகையில் இந்திய அணியானது வரும் அயர்லாந்து தொடருக்கு பின்னர் ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது, இதற்கு ருத்துராஜ் கெய்க்வாட் தலைமை தாங்குகிறார், மேலும் இதற்கு பிறகு மிகப்பெரிய போட்டியான 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இப்படி இந்திய அணி ஓய்வின்றி அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்க இருப்பதினால் அவர்களுக்கு ஓய்வு என்பது மிகவும் முக்கியம்.
இந்நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு அயர்லாந்து சுற்று பயணத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக பி.சி.சி.ஐ தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டு அவரது தலைமையின் கீழ் இளம் வீரர்களும் இந்த அணிக்கு பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமணன் செயல்பட உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதனால் இந்திய அணியின் வீரர்களுக்கும் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டிற்கு பணிச்சுமை என்பது குறையும். மேலும் டிராவிட் அவ்வவ்போது ஓய்வெடுக்கையில் வி.வி.எஸ் லக்ஷ்மணனே இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். எனவே லக்ஷ்மன் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரது கூட்டணியிலேயே இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் என்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் இதில் இடம் பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.