இவருக்கு கவனமாக பந்து வீச வேண்டும்… இல்லையென்றால் – இந்தியா vs பாகிஸ்தான் போட்டி குறித்து வகாப் ரியாஸ்.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும்

By ·

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியாது நேபாளத்துக்கு எதிராக 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நடைபெற இருக்கிறது. இந்த ஆட்டத்தின் மிகவும் சுவாரசியமான அம்சங்களில் ஒன்று இந்தியாவின் நட்சத்திரங்கள் நிறைந்த பேட்டிங் வரிசைக்கும் பாகிஸ்தானின் வலிமையான வேகத் பந்துவீச்சு தாக்குதலுக்கும் இடையிலான போட்டியாகும். ரோஹித் ஷர்மா, விராட் கோலி, மறுபிரவேச வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா மற்றும் ஷுப்மான் கில் போன்றவர்கள், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவூப் போன்ற உலக கிரிக்கெட்டின் சில கடுமையான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மோத இருக்கின்றனர்.

இருந்த போதிலும் ரோஹித் சர்மா கடந்த 2019 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா சதமடித்து தோற்கடித்ததை மறக்காதீர்கள் என்று பாகிஸ்தானை சேர்ந்த வகாப் ரியாஸ் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் பேசுகையில் “கேஎல் ராகுல் காயத்தை சந்தித்துள்ளது நிச்சயமாக இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். ஏனெனில் மிடில் ஆர்டரில் முக்கிய வீரரான அவருக்கு அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பது நன்றாக தெரியும். குறிப்பாக 2019 உலகக்கோப்பையில் அவருக்கு எதிராக நான் விளையாடியுள்ளேன்.

அவர் மிகவும் திடமான வீரர். அதை விட ரோகித் சர்மாவை பாகிஸ்தான் ஆரம்பத்திலே அவுட்டாக்குவதற்கான வழியை கண்டறிய வேண்டும். ஏனெனில் அவர் எப்போதுமே பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து பெரிய ரன்களை குவித்து வருகிறார். அதே போல இந்தியாவின் புதிய பவுலிங் அட்டாக்கை பாபர் அசாம் மற்றும் இமாம் ஆகியோர் தகர்க்க வேண்டும்

இந்த போட்டியில் யார் முதல் 10 ஓவர்களில் நங்கூரமாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு அதிக வாய்ப்பு ஏற்படும். ஏனெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளின் பேட்டிங் பெரும்பாலும் டாப் 3 பேட்ஸ்மேன்களை சார்ந்துள்ளது. அதனால் தான் இந்த போட்டியில் புதிய பந்து வெற்றியை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்” என கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை