வீடியோ : மும்பை வெற்றியை 2011 உலகக்கோப்பை போல தேசிய கீதம் பாடி கொண்டாடிய ரசிகர்கள்.

ஐபிஎல் 2023 லீக்கில் 54 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இதில் அபாரமாக பேட்டிங் செய்த மும்பை அணி 16.3 ஓவர்களிலேயே பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதன் மூலம் பெங்களூரு அணி ஐபிஎல் புள்ளி பட்டியலில் 3 வது இடத்

By ·

ஐபிஎல் 2023 லீக்கில் 54 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இதில் அபாரமாக பேட்டிங் செய்த மும்பை அணி 16.3 ஓவர்களிலேயே பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதன் மூலம் பெங்களூரு அணி ஐபிஎல் புள்ளி பட்டியலில் 3 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தான் நேற்று MI vs RCB போட்டியின் போது ஒரு சம்பவம் நடந்தது.

அதாவது போட்டியின் 2.30 நிமிட இடைவெளியின் போது மும்பை vs ஆர்சிபி போட்டி நடக்கும் வான்கடே மைதானத்தில் வந்தே மாதரம் பாடலின் இசை ஒழிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கடந்த 2011ஆம் இந்தியா உலக கோப்பையை வென்றபோது நடந்தது போன்று தேசிய கீதத்தை பாடினார்கள். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வ்ருகிறது.

அதோடு தேசிய கீதம் பாடப்படும் போது விராட் கோலியின் ரியாக்சன் விடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வருகிறது. இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு இதே வான்கடே மைதானத்தில் இந்தியா vs இலங்கை உலக கோப்பையின் போது இந்திய அணி வெற்றியின் நுனியில் இருக்கும் போது இசைக்கப்பட்டது அப்போதும் இதே போன்று ரசிகர்கள் அனைவரும் தேசிய கீதத்தை பாடியது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் போட்டியை பற்றி பார்க்கையில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் பௌலிங்கை தேர்வு செய்தார்.அதன் படி களமிறங்கிய பெங்களூரு அணியின் ஆரம்பம் சோதனையாகவே ஆரம்பிக்க கோலி 1 ரன்களில் வெளியேற, அதன் பின் வந்த ரவாத் 6 ரன்களில் அவுட்டாகினார்.

அணியின் கேப்டன் டு ப்ளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இணைந்து அற்புதமாக இணைந்து விளையாடி 100  பார்ட்னர்ஷிப்பை பூர்த்தி செய்தனர். மேக்ஸ்வெல் 68 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, டு ப்ளசிஸ் 65 ரன்களில் வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது பெங்களூரு அணி.

200 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்திலே அதிரடி பாணியை விட வில்லை. இருப்பினும் மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் பெங்களூரு அணியின் பௌலிங்கை சிதறடித்து வர 42ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின் கேப்டன் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதற்க்கு பின்  வந்த சூர்யகுமார் யாதவ் அவருடைய சிறப்பனாக இன்னனிங்சை விளையாடி அணிக்கு நம்பிக்கை சேர்த்தார்.

அவருடன் இணைந்து விளையாடி வந்த வதேரா 34 பந்தில் 52 ரன்களை அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இவர்களின் சிறப்பான இன்ன்னிங்சால் 200  இமாலய இலக்கை 16.3  ஓவர்களிலே எட்டி வெற்றி பெற்றனர்.  இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் 3 இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை